இனப்படுகொலை இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் – மதுரை

- in பரப்புரை
10-8-2014 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு மதுரை மீனாட்சி பஜாரில் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலைப் போரை நடத்தும் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புக்களை சார்ந்த தோழர்களும், பொது மக்களும் திரளாக கலந்துகொண்டு இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். நிகழ்வில் – புரட்சிகர இளைஞர் முன்னணி, மதிமுக மதுரை மாவட்டம், பாப்புலர் பிராண்ட் அப் இந்தியா, தமிழ் தேச குடியரசு, தமிழ் புலிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கம், எஸ்.டி.பி. ஐ மதுரை மாவட்டம், முத்துகுமார் எழுச்சி பாசறை, தமிழ்தேச பொதுவுடைமை கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, INL பார்ட்டி, தமிழ் தமிழர் இயக்கம் ஆகிய இயக்கங்களை சார்ந்த தோழர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

 

Leave a Reply