இந்திய ஊடகங்களின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

- in பரப்புரை
இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்படும் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்கினை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம். தேசிய இனங்களின் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் ஊடக நிறுவனங்களின் மக்கள் விரோதத் தன்மையை கேள்வி கேட்க வாருங்கள். பண பலமும், அதிகார பலமும் மிக்க அறமற்ற ஊடகங்களை எதிர்த்துக் கேள்வியெழுப்ப ஒன்று கூடுவோம். மீனவர் பிரச்சினை, ஈழம், இசுலாமியர், கூடங்குளம், மூவர் தூக்கு ஆகியவற்றில் உண்மைக்கு மாறான பொய் பிரச்சாரங்களை விதைக்கும் இந்திய ஊடகங்களின் அறமற்ற போக்கினைக் கண்டிப்போம்.


இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்படும் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்கினை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 22-9-2014 மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய இனங்களின் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் ஊடக நிறுவனங்களின் மக்கள் விரோதத் தன்மையை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. ஊடக சனநாயகத்திற்க்கான கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்பாட்டத்தில் மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழ் தேசிய பேரியக்கம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ,தந்தை பெரியார் திராவிடர் கழகம்,தமிழர் முன்னேற்ற கழகம்,தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்,தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம்,மனித நேய மக்கள் கட்சி,இந்திய தேசிய லீக் மற்றும் மக்கள் இணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களை சார்ந்த தோழர்களும் உணர்வாளர்களும் கலந்துக்கொண்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தமிழர்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், கூடங்குளம் அணுவுலை, ஏழு தமிழர்கள் விடுதலை, ஈழ விடுதலை போராட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் பொய் செய்திகளை ஊடகங்கள் பரப்பி வருவதற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.Leave a Reply