ஈழ ஆதரவு தமிழர் நீதி பேரணி

- in பரப்புரை
24-9-2014 அன்று மாலை 3 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து தாளமுத்து நடராசன் மாளிகை வரை ஈழ ஆதரவு தமிழர் நீதி பேரணி நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இப்பேரணியில் 150 க்கும் மேற்பட்ட அமைப்புக்களும் கட்சிகளும் தமிழீழ கோரிக்கைகளுக்காக ஒன்றிணைந்து பங்குபெற்றன. இப்பேரணியில் மே பதினேழு இயக்க தோழர்களும் திரளாக கலந்துகொண்டனர். தோழர்கள் தமிழினப்படுகொலையை கண்டித்தும், இனப்படுகொலையில் இந்திய அதிகாரிகளை விசாரிக்க கோரியும், தமிழீழ விடுதலையை வலியுறுத்தியும், விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரியும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டுவரும் சுப்பிரமணியன் சாமியை கண்டித்தும் தமிழினப்படுகொலையில் கூட்டாளிகளாக செயல்பட்ட இந்து பத்திரிகை மற்றும் ஏர்டெல் ஆகியவற்றை தமிழர்கள் புறக்கணிக்க கோரியும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியில் அணிவகுத்து சென்றனர்.


Leave a Reply