- in பரப்புரை
பாஜகாவின் நரித்தனம்:

நாங்கள் (மே 17 இயக்கம்) ஏற்கனவே எச்சரித்ததை இப்பொழுது சிவசேனையின் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள். 

பாஜகவுடனான முரண்பாடு பற்றி உத்தவ்தாக்கரே பேட்டி அளித்திருக்கிறார். 

அதில் “ மோடி சொல்வதைப் போல மகாராட்டிரத்தினை அவர்கள் உடைக்க மாட்டோம் என்று சொல்வது உண்மையல்ல. சிறிய மாநிலங்களை உருவாக்குவதே எங்களது கொள்கை என்று அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள்….மராத்திய மாநிலம் ஒன்றாக இருக்கவேண்டுமென்றால் சிவசேனைக்கு வாக்களிக்க வேண்டும் இல்லையெனில் பாஜக மாநிலத்தினை உடைத்து சுக்குநூறாக்கிவிடும்…”

“…மேலும் சிறிய கட்சிகளை ஒழித்துகட்டுவதே பாஜகவின் வேலை… ஹரியானாவின் குல்தீப் பிசோனிக்கு முதலமைச்சர் என்று சொல்லிவிட்டு இன்று ஹரியானவின் தேர்தலில் அவருக்கு என்ன நடந்தது என்று பாருங்கள்..”

25 ஆண்டுகளாக இந்துத்துவத்தினை வளர்க்கிறோம் என்று பாஜகவுடன் கூட்டணி வைத்த சிவசேனை இப்படியாக பேசுகிறது.

ராஜ் தாக்கரே , நவநிர்மாண் சேனா என்று மராத்தியத்தில் டோல்கேட்டுகளை உடைத்த, பீகார் உழைப்பாளிகளை விரட்டிய கட்சியின் தலைவர் கொடுத்த பேட்டியில்,

“ மோடி குஜராத்தின் முதலமைச்சராகவே நடந்து கொள்கிறார். புல்லட் ரயில் நீண்ட தொலைவுகளுக்கானது , ஆனால் எதற்காக அகமாதாபாத்திற்கும்-மும்பைக்கு விடுகிறார்?.. ஏன் மும்பை-தில்லி, மும்பை-சென்னை என்று இவர் விடவில்லை. மராத்திய மாநிலத்தினை உடைக்க வேண்டுமென்றுதான் விதர்பா மாநில கோரிக்கைக்கு ஆதரவாக மராத்திய மாநில பாஜக தலைவர் பேசுகிறார். ஆனால் மோடி மராத்தியத்தினை உடைக்கமாட்டோம் என்கிறார். உத்தவ் தாக்கரே என்னிடம் பேசும் பொழுது சொன்னேன். பாஜக உங்களுக்கு எதிராக போவதை வெளியில் இருக்கும் என்னால் கவனிக்க முடிந்த பொழுது ஏன் உங்களால் கவனிக்க இயலவில்லை என்றேன்…”

இந்தியத்தினையும் – இந்துத்துவத்தினை தூக்கி பிடிக்கும் சிவசேனைக்கும்,மராத்தியத்திற்கும் இந்த கதி என்றால் தமிழகத்தின் கட்சிகள் என்னவாகும் என்பதை நினைத்து பார்க்கவேண்டும்.

பாஜகவுடன் கூட்டணி வைத்த சிறிய கட்சிகளை எளிமையாக தின்று ஏப்பம்விடும் வேலை முடிந்தவுடன் பெரிய கட்சிகளின் கூடாரங்களை காலி செய்வதற்கு தனது மத்திய பெரும்பான்மை அதிகாரத்தினை பயன்படுத்தும்,.

தமிழகத்தில் பாஜக தன்னுடன் கூட்டணி கட்சிகளாக இருப்பவைகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருப்பதை கண்கூடாக காண முடிகிறது. அக்கட்சிகளின் தலைமைகள் விழித்துக்கொண்டதாக தெரியவில்லை.

மேலும் தமிழகத்தினை மூன்று மாநிலமாக மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்து செயல்படும் சிலர் மோடியை திருச்சி மாநாட்டின் போது சென்று சந்தித்து கோரிக்கை வைத்ததை வெகு விரைவில் ஒரு பெரும் கோரிக்கையாக மாற்றி, கோரிக்கையை போராட்டத்தின் மூலம் முன்னகர்த்துவதை நாம் காணலாம்.

தெலுங்கானா உருவாக்கப்பட்ட பின்னர் தெலுங்கு தேசிய இனம் ஒன்றாக தமது உரிமைகளுக்கு வலிமையுடன் இணைந்து போராடுவது என்பது இயலாது என்பதை நாம் உணரவேண்டும்.. இதுவே தமிழகத்திற்கும் நிகழும்.

தமிழகத்தினை உடை.
கட்சிகளை கைப்பற்று.
தமிழ்த்தேசிய சிந்தனைகளை முடக்கு,
ஈழ ஆதரவாளர்களை ஒடுக்கு,
சாதியை வளர்த்து, மதவெறியை அதிகரி,
கலவரத்தினை ஊக்குவி,
தமிழகத்தின் அதிகாரத்தினை கைப்பற்று.

இதற்கு இடையூறாக இருக்கும் பெரியார் – பிரபாகரன் ஆகிய பிம்பங்களை உடை.

தமிழா, ஸ்வீட் எடு கொண்டாடு.

படத்தில்: விதர்பா மாநில கோரிக்கைக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் தேஷ்முக்கின் போராட்டத்தில் பாஜக தலைவர் நிதின் கட்கரி

Deshmukh breaks fast after Gadkari assures Vidarbha state if BJP comes to power at Centre : Sat, Dec 14th, 2013
http://www.nagpurtoday.in/deshmukh-breaks-fast-after-gadkari-assures-vidarbha-state-if-bjp-comes-to-power-at-centre/12140051

Leave a Reply