- in பரப்புரை
காவிரியை தடுக்கும் கர்நாடகா அரசு! , கள்ள மவுனம் காக்கும் இந்திய அரசு!-
காவிரியின் குறுக்கே “மேகதாது” என்னுமிடத்தில் 48 T.M.C தண்ணீரை சேமிக்கும் இரண்டு புதிய அணைகளை கட்ட கர்நாடகா அரசு முடிவெடுத்துள்ளது.குடீநீர் ஆதாரத்திற்காகத்தான் இந்த அணையை கட்டுகிறோமென்று இல்லாத பொய்யை சொல்லி அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது கர்நாடக அரசு.
ஏற்கனவே வெள்ளம் வந்தால் மட்டுமே தமிழகத்திற்க்கு தண்ணீர்.இல்லையென்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது என்று திமிருடன் நடந்துகொள்ளும் கர்நாடக அரசு இப்போது புதிய அணை என்ற பாறாங்கல்லை தூக்கி தமிழனின் தலையில் போடுகிறது.
ஏற்கனவே நமக்கு தரவேண்டிய குறைந்த அளவு தண்ணீரை கார்நாடகத்திடமிருந்து வாங்குவத்ற்க்கே நித்தம் நித்தம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நாம்,இப்போது மேலும் இரண்டு அணைகளை கர்நாடகம் கட்டினால் வரும்காலங்களில் தண்ணீரை பேப்பரில் எழுதி தான் பார்க்க முடியும்.
இதை தடுக்க வழக்கு தொடுத்திருக்கும் தமிழக அரசை பார்த்து இது அர்த்தமில்லாதது,எங்கள் பகுதியிலுள்ள காவிரி ஆற்றின் குறுக்கே நாங்கள் அணை கட்டுகிறோமென்றும் இதனால் தமிழகத்திற்க்கு என்ன என்றும் கர்நாடக பாசனத்துறை அமைச்சர் பாட்டில் இன்று தி ஹிந்து பத்திரிக்கையில் கூறியிருக்கிறார்.கர்நாடக அமைசசருக்கு தமிழ்நாடு நெய்வேலி நிலக்கரி மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் தான் கர்நாடகம் ஒளிவெள்ளத்தில் மிதக்கிறது என்ற உண்மை தெரியாது போல.(ஒருவேளை இதை நாம் தான் அவர்களுக்கு புரிய வைக்கவில்லையோ?)
இதை எல்லாம் தடுக்க வேண்டிய பொறுப்புள்ள மத்திய அரசு வழக்கம்போல வறண்டால் தமிழகம் தானே வறண்டு போகும். செத்தால் தமிழன் தானே சாவான் அதனால் நமக்கென்ன என்று தனது தமிழின விரோத கொள்கையை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே மீத்தேன் எடுக்கின்றோம் என்ற பெயரில் தஞ்சையை பாலைவனமாக்கி கார்ப்ரேட் முதலாளிக்கு தாரை வார்க்க துடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு இப்போது காவிரியில் தண்ணீர் வரவில்லையென்றால் விவசாயிகள் தாமாகவே நிலத்தை விட்டு விலகுவார்கள் நமக்கு வேலை மிச்சம் என்று எண்ணித்தானோ என்னமோ இந்த விசயத்தில் கள்ள மவுனம் காக்கிறது.
சர்வதேச சட்டத்தின் படியும்,இந்திய சட்டத்தின் படியும் கடைமடை பகுதியான தமிழகத்தின் அனுமதியில்லாமல் எந்த ஒரு புதிய திட்டங்களையும் காவிரியில் செயல்படுத்தக்கூடாது. எனவே கார்நாடக அரசின் இந்த போக்கை உடனே நிறுத்த செய்து வருங்காலங்களில் இது போன்ற பிரச்சனைகளை கர்நாடக செய்யாமலிருக்க வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு எடுக்க வேண்டும்.

கொண்டல் மே 17 இயக்கம்

Leave a Reply