- in பரப்புரை
உயிருக்கு ஆபத்தான சூழலில் ஈழ சொந்தங்கள் என்ன செய்யப்போகிறாய் தாய்த்தமிழகமே


திருச்சி சிறப்பு முகாம் தற்ப்பொழுதைய நிலை

திருச்சி சிறப்புமுகாமில் நேற்று 20 பேர் தற்கொலை முயற்சி செய்தனர் இவர்களில் யாரையும் இன்று காலைவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் சிறப்பு முகாமிற்கு உள்ளேயே வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை 7 பேருடைய உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து சிறை மருத்துவர் இவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறையில் வசதியில்ல எனவே பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறி அவரே ஆம்புலன்சிற்கும் தகவல் சொல்லி வரவைத்துவிட்டார். ஆனால் அவர்களில் 4 பேரை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ள காவல்துறையினர் மற்றவர்களை இதுவரை சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து நேற்று தூக்க மாத்திரை போட்ட பலர் மீண்டும் தங்கள் கையில் இருந்த தூக்க மாத்திரைகள் நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். இதனால் பலர் மீண்டும் கவலைக்கிடமாக இருக்கிறார்கள்

திருச்சி சிறப்பு முகாமை கவனித்துவரும் டெபுட்டி கலெக்டர் நடராஜனை தொடர்புகொண்டு கேட்ட பொழுது 4 பேர் மட்டுமே தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டதாகவும் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டதாகவும் தகவல் சொல்கிறார் மற்றவர்கள் குறித்து கேட்ட பொழுது மற்றவர்களை பற்றி தனக்கு தெரியாது என்று பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறார்.


எங்களை வாழ விடுங்கள் அல்லது சாகவிடுங்கள் என்ற கோரிக்கையோடு 5வது நாளாக திருச்சி சிறப்புமுகாமில் உயிருக்கு ஆபத்தான சூழலிலும் உண்ணாவிரதம் தொடர்ந்துவருகிறது.




கார்த்திக் மே 17 இயக்கம்

Leave a Reply