- in பரப்புரை
மீனவர்கள் பொது மன்னிப்புக்கு பின்னால் உள்ள அரசியல்- திருமுருகன் காந்தி 

ஐந்து மீனவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வாய்ப்பிருந்தும், வழக்கினை நடத்தாமல் , உயிர்பிச்சை ராஜபக்சே வழங்கினார், மோடி பேரம் பேசி காப்பாற்றினார் என்று மூன்றாம் தர அரசியலை செய்து முடித்திருக்கிறார்கள். 

இதன் மூலம் மீனவர்கள் போதை பொருள் கடத்தும் குற்றவாளிகள் எனும் அவதூறு அழியாமால் பார்த்துக் கொண்டன இரண்டு அரசுகள். 

விடுதலையான மீனவர்களை எதற்காக தில்லி அழைத்துச் செல்லவேண்டும்?.. எதற்காக எந்த ஒரு ஊடகமும் சந்திக்க இயலாதவாறு மறைந்து வைக்கப்பட வேண்டும்.?..

ஏ.என்.ஐ (ANI)நியூஸ் ஏஜென்சி மட்டும் அனுமதிக்கப்பட்டு, அந்த நிறுவனம் வெளியுறவுத்துறை அதிகாரிகளால் அழைக்கப்பட்டு மீனவர்களை சந்தித்து பேட்டியெடுக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். மேலும், இந்த ஊடகம் இம்மீனவர்கள் தங்க வைக்கப்பட்ட முகவரியை மற்ற ஊடகத்திற்கு கொடுக்க கூடாது என கட்டளை இடப்பட்டிருக்கிறது. இது ஏன் நடந்தது?… ராஜபக்சேவிற்கு, மோடிக்கு நன்றி என மீனவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அது வரை எந்த மீனவரின் குடும்பமும் இவர்களிடம் பேச அனுமதிக்கப்படவில்லை.

இந்த மீனவர்கள் கிட்டதட்ட தில்லியில் சிறைக்காவலிலேயே வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்.

இதைப்பற்றியெல்லாம் கேள்வி எழுப்பாமல், ‘மோடி காப்பாற்றினார்” என்று எதேனும் ஒரு ஊடகம் எழுதினால் அது நேர்மையற்ற வெட்கங்கெட்ட கையூட்டு எதிர்பார்த்து செய்யப்படுகிற நடவெடிக்கை என்பதில் எந்த ஐய்யமும் தேவையில்லை.

ராஜபக்சேவின் காலைப் பிடித்தாவது சுயவிளம்பரம் தேடும் ஒரு கும்பலை என்னவென்று அழைப்பீர்கள்.

#கேமரா_எங்கே_வைக்கப்பட்டிருப்பது_மட்டுமல்ல_யார்_வைத்திருக்கிறார்கள்_என்பதுவும்_நம்_பிரதமருக்கு_தெரியும்

Leave a Reply