Events

Loading Events
Find Events

Past Events

Events List Navigation

April 2017

தமிழர்களின் வரலாற்று அடையாளமான கீழடியை மீட்க ஒன்றுகூடுவோம்.

April 28
Thiruvalluvar Statue, Anna Bus Stand, Madurai, Anna Bus Stand
Madurai, Tamil Nadu 625009 India
+ Google Map

ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பன்முகத்தன்மை கொண்டது.அது உணர்வெழுச்சியின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல உண்மையான தரவுகளின் அடிப்படையில் எழுத்தப்படுவது.தமிழர்களின் வரலாறு நீண்ட நெடிய பண்பாட்டுக்கு சொந்தமானது. தமிழர்களின் தொழில் நுட்பத்தையும்,வணிகத்தின் வளர்ச்சியையும்,எழுத்தறிவையும் நாம் தொல்லியல் ஆதாரம் கொண்டும்,கல்வெட்டு ஆதாரம் கொண்டும்,ஓலை சுவடிகள் ஆதாரம் கொண்டும் எழுதி வருகிறோம். அது சிந்துசமவெளியின் தொடர்ச்சியாக இருப்பது தெள்ளத்தெளிவானது. தமிழர்களின் வரலாற்று ஆய்வின் தொடர்ச்சியாக கீழடி தொல்லியல் ஆய்வு அமைந்திருப்பதும் அங்கிருந்து கிடைக்கிற புதிய தரவுகள் தமிழுக்கு செழுமை தரக்கூடியதாகவும் இருக்கிறது. கீழடி அகழாய்வினை இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழாய்வுப் பிரிவு முன்னெடுத்து, அப் பிரிவினைச் சார்ந்த கி அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்காணிப்பு தொல்பொருளியலாளராகத் தலைமை ஏற்று மிக சிறப்பாக நடத்தி கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்…

Find out more »
May 2017

ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்த எதிர்ப்பு எழுச்சிக் கூட்டம்.

May 1 @ 5:00 pm - 10:00 pm
MGR Nagar, Chennai Chennai, TamilNadu India + Google Map

உழைப்பாளர் நாளில் இணைவோம். ஏழை எளிய உழைக்கும் மக்களின் வாழ்வை அழிக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தினை கிழித்தெறிவோம். விவசாய மானியங்களை நிறுத்துகிற விவசாயிகளை அழிக்கும் சூழ்ச்சியை முறியடிப்போம். மே 1, திங்கள் 5 மணி, எம்.ஜி.ஆர் நகர், சென்னை. அனைவரும் வாருங்கள். - மே பதினேழு இயக்கம் 9884072010

Find out more »

திண்டுக்கல்லில் மூடப்படும் ரேசன் கடைகள் புத்தக வெளியீடு மற்றும் கருத்தரங்கம்.

May 14 @ 5:00 pm - 9:00 pm
VGS Meeting Hall, Bus Stand, Dindigul, VGS Meeting Hall,Bus Stand
Dindigul, Tamil nadu India
+ Google Map

திண்டுக்கல்லில் மூடப்படும் ரேசன் கடைகள் புத்தக வெளியீடு மற்றும் கருத்தரங்கம். 14 மே 2017 ஞாயிறு மாலை 5மணி VGS மீட்டிங் ஹால், பேருந்து நிலையம் அருகில், திண்டுக்கல். தோழர்கள் அனைவரும் பங்கேற்கவும்.

Find out more »

தமிழீழ இனப்படுகொலைக்கான 8ம் ஆண்டு நினைவேந்தல்

May 21 @ 4:30 pm - 10:00 pm
Kannagi Statue, Marina Beach, Chennai, TamilNadu Chennai, + Google Map

தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்த வாருங்கள். ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் நம் கண் முன்னே கொல்லப்பட்டதை மவுன சாட்சியாய் வேடிக்கை பார்த்த குற்றவுணர்ச்சி நமக்கெல்லாம் இருக்கிறது. அமெரிக்கா-இந்தியா-இங்கிலாந்து-இலங்கையின் கூட்டுச் சதியால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தரும் வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. நீதியின் பக்கம் நிற்போர் அனைவரும் அஞ்சலி செலுத்தி உறுதி ஏற்க வாருங்கள். சாதி, மதம் கடந்த தமிழராய் வாருங்கள். உங்கள் குடும்பத்துடன் வாருங்கள். தமிழீழத்திற்கான நீதியை மீட்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் தமிழர் கடலான சென்னை மெரீனா கடற்கரையில் கூடிக்கொண்டே இருப்போம். உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம். பல்லாயிரக்கணக்கில் கூடுவோம். மே 21 மாலை 4 மணிக்கு தமிழர் கடலில்…

Find out more »

தமிழக அரசினைக் கண்டித்து ஒன்று கூடுவோம்

May 25 @ 5:00 pm - 9:30 pm
Valluvar Kottam, Chennai
Chennai, India
+ Google Map

நினைவேந்தல் நிகழ்வினை தடுக்க அடக்குமுறையை ஏவிய பாஜக வின் பினாமி அரசான தமிழக அரசினைக் கண்டித்து ஒன்று கூடுவோம். 25-5-2017, வியாழன் மாலை 5 மணி, வள்ளுவர் கோட்டம். நினைவேந்தலை நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 17 தோழர்களையும் விடுதலை பெறச் செய்வோம். தமிழர் கடலான மெரீனாவில் நினைவேந்தல் நடத்தும் உரிமையினை மீட்க தமிழராய் ஒன்றிணைந்து வாருங்கள். மெரீனாவில் நினைவேந்தல் நடத்துவது தமிழர்களின் பண்பாட்டு உரிமை. நமது உரிமையினைப் பறித்து அடக்குமுறையினை ஏவிய பாஜக-வின் பினாமி அரசான தமிழக அரசினைக் கண்டிக்க திரள்வோம். நினைவேந்தலை நடத்தியதற்காக சிறை செய்யப்பட்ட மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி மற்றும் காஞ்சி மக்கள் மன்றத்தை சார்ந்த நம் தோழர்கள் 17 பேரை சிறையிலிருந்து விடுதலை செய்வோம்.…

Find out more »

நினைவேந்தல் கைதைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்

May 27 @ 3:30 pm - 6:00 pm
Bethaniyapuram, Opp to Guru Theater,Madurai, Bethaniyapuram, Opp to Guru Theater,
Madurai, TamilNadu India
+ Google Map

மதுரை தோழர்களின் கவனத்திற்கு... தமிழ் மக்களின் பண்பாட்டு உரிமைகளை தொடர்ச்சியாக நசுக்கி வரும் பாஜக மற்றும் அதன் பினாமி அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தலை நடத்திய மக்கள் இயக்கங்கள் மீது போலி வழக்குகளை பதிவு செய்த அரசின் சதியை கண்டித்தும் சென்னையை தொடர்ந்து மதுரையிலும் சனிக்கிழமை (27-05-2017) மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தை தோழமை இயக்கங்களோடு இணைந்து நடத்த உள்ளோம்.. பொதுமக்கள் ஒன்று கூடி அரசியல் பேசும் பன்பைதொடர்ந்து நசுக்கும் அரசுக்களுக்கு எதிராக ஒரு சாமானியனாக நமது வலிமையான கண்டனத்தை அரசுக்கு தெரிவிப்போம் வாருங்கள் என்று உரிமையோடு அழைக்கிறோம். பெத்தானியபுரம், குரு திரையரங்கம் அருகில், மே 27, 2017 சனி மாலை 4 மணி, மே 17 இயக்கம். 8940110098

Find out more »
July 2017

GST-ஐ எதிர்க்க வேண்டியது ஏன்? விரிவாக விளக்கும் கருத்தரங்கம்

July 16 @ 5:00 pm - 9:30 pm
Anand Chandrasekar Mini Hall, Thambiyah Street, West Mambalam, Chennai, Tamilnadu
Free

GST-ஐ எதிர்க்க வேண்டியது ஏன்? GST வரி விதிப்பின் பல்வேறு விடயங்களை விரிவாக விளக்கும் கருத்தரங்கம். அரசியல்-சமூக-பொருளாதார பார்வையில் GST ஏற்படுத்தப்போகும் விளைவுகளைப் பற்றி பேசுகிறோம். இவற்றை நாம் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். அனைவரும் வாருங்கள். ஜூலை 16, 2017 ஞாயிறு மாலை 5 மணி, ஆனந்த் சந்திரசேகர் அரங்கம், தம்பையா தெரு(ஸ்டேட் பேங்க் அருகில்), மேற்கு மாம்பலம். - மே பதினேழு இயக்கம் 9884072010

Find out more »
September 2017

மதுரையில் பாஜக அலுவலகம் முற்றுகை

September 2 @ 11:00 am - 5:00 pm
Appolo Hospital, KK Nagar, Madurai, TamilNadu
tamil nadu neet sucide victim anita

1176 மதிப்பெண் எடுத்து, நீட் தேர்வினை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதா மரணம் பார்ப்பன பாஜக அரசின் பச்சைப் படுகொலை. தமிழக மாணவர்களை வஞ்சித்த பாஜக எடுபிடி அதிமுக அரசே! பதவி விலகு! கல்வி உரிமை மாநிலத்திற்கே சொந்தம். இந்திய அரசே! ஒற்றைக் கல்வி முறை என்ற பெயரில் பார்ப்பனியத்தை திணிக்காதே. 196.75 கட் ஆஃப் எடுத்த அனிதாவுக்கு மருத்துவக் கல்வி இல்லையென்றால் என்னங்கடா உங்கள் நியாயம்? பார்ப்பன CBSE படித்தவனுக்குத்தான் மருத்துவக் கல்வி என்றால் மருத்துவக் கல்லூரிகளை இழுத்து மூடு. அப்பல்லோ மருத்துவமனை முன்பு, கே கே நகர், மதுரை.​ ​காலை 11 மணி - சனிக்கிழமை - செப்டம்பர் 02 2017​

Find out more »

சென்னையில் பாஜக அலுவலகம் முற்றுகை.

September 3 @ 10:00 am - 5:00 pm
Ma Po Si Statue, Pandi Bazar, Chennai

1176 மதிப்பெண் எடுத்து, நீட் தேர்வினை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதா மரணம் பார்ப்பன பாஜக அரசின் பச்சைப் படுகொலை. தமிழக மாணவர்களை வஞ்சித்த பாஜக எடுபிடி அதிமுக அரசே! பதவி விலகு! கல்வி உரிமை மாநிலத்திற்கே சொந்தம். இந்திய அரசே! ஒற்றைக் கல்வி முறை என்ற பெயரில் பார்ப்பனியத்தை திணிக்காதே. 196.75 கட் ஆஃப் எடுத்த அனிதாவுக்கு மருத்துவக் கல்வி இல்லையென்றால் என்னங்கடா உங்கள் நியாயம்? பார்ப்பன CBSE படித்தவனுக்குத்தான் மருத்துவக் கல்வி என்றால் மருத்துவக் கல்லூரிகளை இழுத்து மூடு.   செப்டம்பர் 3, 2017 ஞாயிறு காலை 10 மணி   - மே பதினேழு இயக்கம்

Find out more »

கோவையில் அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு – கண்டனக் கூட்டம்

September 10 @ 5:00 pm - 9:30 pm

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வா. செப்டம்பர்10, ஞாயிறு மாலை 5 மணி, அண்ணாமலையார் அரங்கம், சாந்தி திரையரங்கம் அருகில், கோவை ( ரயில் நிலையம் எதிரில்) - மே பதினேழு இயக்கம் 9884072010

Find out more »
+ Export Events

201720162015201420132012201120102009