ஐ.நா அலுவலக முற்றுகைப் போராட்டம் 12.02.16

ஐ.நா அலுவலக முற்றுகைப் போராட்டம் 12.02.16

 

முருகதாசன் நினைவுநாளில் சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக வருடம் தோறும் இப்போராட்டம் மே17 இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இன்று நிகழ்ந்த போராட்டத்தில் , ஐ.நா மனித உரிமை ஆணையர் அல்-ஹுசைனின் அறிக்கையை கண்டித்து முழக்கங்களுடன் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன. இப்போராட்டத்தில் பங்கேற்ற அமைப்புகள்/கட்சிகள்
மதிமுக, மனித நேய மக்கள் கட்சி , எஸ்.டி.பி.ஐ, விடுதலைத் தமிழ்ப்புலிகள், தந்தைப்பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடுதலைக்கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழ்த்தேசிய குடியரசு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னனி, தமிழக மக்கள் புரட்சிக்கழகம், மே17 இயக்கம் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன.

அல்-ஹுசைனைக்கண்டித்தும், ஐ.நாவின் தீர்மானத்தின் மூலமாக நடத்தப்படும் இலங்கை ஆதரவு அரசியலை அம்பலப்படுத்தியும் தோழர்கள் போராட்டம் நடத்தி கைதானார்கள்.

About the author

மே பதினேழு இயக்கம் தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியிடாக வைத்து தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் அரசியல்-சமூக அமைப்பு. தமிழீழத் தமிழர்களின் விடுதலை உரிமையின் நியாயத்தினை உலகெங்கும் எடுத்துச் செல்வதற்கும், சர்வதேசத்தினால் மறுக்கபடும் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் சனநாயகபூர்வமான செயல்பாடுகளிலும், அறிவுச்சமூகச் சூழலிலும் செயல்படும் அமைப்பு. நேர்மையான முற்போக்கு அரசியல் சிந்தனையுடைய தோழர்களை தமிழினத்திற்கு பணியாற்ற தோழமையுடனும், உரிமையுடனும் முத்துக்குமாரின் நண்பர்களாய் அழைக்கிறோம். கைகோர்த்து களம் காணுவோம். நாம் வெல்வோம்.

Leave a Reply