தமிழர் தேசியத் தொழிலாளர் முன்னணி சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

தமிழர் தேசியத் தொழிலாளர் முன்னணி சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

தமிழர் வாழ்வுரிமையான வேலை உரிமையைப் பறிக்கும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவடி, ஓ.சி.எப். நிர்வாகத்தைக் கண்டித்து,
09-07-2016 அன்று காலை ஆவடியில், தமிழர் தேசியத் தொழிலாளர் முன்னணி சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத் தோழர்களும் இதில் கலந்து கொண்டனர். தமிழர் நலக் கழகம் என்ற ஒன்றை உருவாக்கி, தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளை நடத்தியதற்காகவும், அது குறித்த பிரச்சாரங்களை செய்ததற்காகவும் அமுதன் என்பவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் தோழர்கள் பேசினர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் அருள்முருகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

About the author

மே பதினேழு இயக்கம் தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியிடாக வைத்து தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் அரசியல்-சமூக அமைப்பு. தமிழீழத் தமிழர்களின் விடுதலை உரிமையின் நியாயத்தினை உலகெங்கும் எடுத்துச் செல்வதற்கும், சர்வதேசத்தினால் மறுக்கபடும் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் சனநாயகபூர்வமான செயல்பாடுகளிலும், அறிவுச்சமூகச் சூழலிலும் செயல்படும் அமைப்பு. நேர்மையான முற்போக்கு அரசியல் சிந்தனையுடைய தோழர்களை தமிழினத்திற்கு பணியாற்ற தோழமையுடனும், உரிமையுடனும் முத்துக்குமாரின் நண்பர்களாய் அழைக்கிறோம். கைகோர்த்து களம் காணுவோம். நாம் வெல்வோம்.

Leave a Reply