அடக்குமுறைக்கு எதிராக திரள்வோம்.

- in போராட்டங்கள்

விவசாயியை கொலை செய்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு, இறந்த விவசாயி மீது வழக்கு!

இசக்கிமுத்து குடும்பம் தீயில் வேகுது, கந்துவட்டி குண்டர்களுக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு!

தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு சிறை!

யாருக்காக உங்க ஆட்சி?
மோடி-எடப்பாடி அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.

கூடங்குளத்தில் போராடிய மக்களுக்காக வழக்காடிய வழக்கறிஞர் செம்மணியை காவல்துறையினர் சட்டவிரோதமாக கடுமையாக தாக்கி உள்ளனர். மணல் கொள்ளைக்கு எதிராகவும், சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வரும் தோழர் முகிலனை காவல்துறையினர் வழிமறித்து தூக்கிச் சென்றுள்ளனர். தோழர் கார்ட்டூனிஸ்ட் பாலாவை வீடு புகுந்து அவரது குடும்பத்தினரை மிரட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.

கார்ட்டூன் வரைந்தால் சிறை, துண்டறிக்கை கொடுத்தால் சிறை, மெழுகுவர்த்தி ஏந்தினால் சிறை, மக்களுக்காக போராடினால் சிறை…! இன்னும் எத்தனை பேரை சிறை வைக்க முடியும் உன்னால்?

போராடுவது நம் அடிப்படை உரிமை. தமிழரின் உரிமைக்காக போராடுபவர்கள் மீதெல்லாம் இந்த அரசு அடக்குமுறையை ஏவிக் கொண்டிருக்க எத்தனை நாள் நாம் வேடிக்கை பார்ப்போம்.

நவம்பர் 10 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் அடக்குமுறைக்கு எதிராக சேப்பாக்கம் மைதானம் எதிரில் திரள்வோம். நாம் பலம் வாய்ந்தவர்கள் என்பதை அரசுக்கு காட்டுவோம்.

அனைவரும் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply