தி இந்து நாளேட்டின் செவிட்டில் அறைந்த ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டம்.

”ஈழத்தமிழர்கள் போராட்ட மனநிலையிலேயே இல்லை. அவர்கள் யாரும் அங்கே போராடவில்லை. அவர்களுக்காக புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அது அவர்களுக்கு எல்லா தீர்வையும் தரும். ஆனால் தமிழகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் சிலர் தான் தேவையில்லாமல் அவர்களை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று நவதூரங்கள் வழியாகவும் சதா புலம்பிக் கொண்டிருக்கும் அம்பி பத்திரிக்கையான ’தி ஹிந்துவின்’ செவிட்டில் அறைவது போல நாங்கள் இன்னும் நீதிக்கான போராட்ட களத்தில் தான் இருக்கிறொமென்று நேற்று யாழ்பாண இந்து கல்லூரிக்கு வருகை தந்த மைத்திரியின் முன்னாலேயே அவருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தி சொல்லியிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.

இத்தனைக்கும் பெருமளவில் இராணுவம் மற்றும் காவல்துறை குவிக்கப்பட்டு இருந்த போதும் மக்கள் பெருமளவில் திரண்டு நின்றிருக்கிறார்கள். அதோடு இல்லாமல் இனப்படுகொலையாளன் மைத்திரிபால சீறீசேனா வரும் வாகனங்களுக்கு முன்னாலேயே சென்று அவருக்கு கருப்புகொடி காட்டியிருக்கிறார்கள். கானாமல் போனோர் குறித்த விசாரணை ஆணையம் எங்கே? சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் எங்கே? என்று விண் அதிர முழங்களையும் அதிபர் முன்னே முழங்கியிருக்கிறார்கள்.

துரோக கும்பலனா சம்பந்தர் மற்றும் சுமந்திரன் போன்றவர்களின் நயவஞ்சகத்தனத்தினை முறியடித்து தங்களுக்கான நீதி போராட்டம் வழியாகத்தான் கிடைக்குமென்று நேற்று கருப்பு கொடி போராட்டம் நடத்தியிருக்கிறார். மேலும் கடந்த 20நாட்களுக்கு மேலாக காணாமல் போன தங்களது உறவுகளின் நிலைமையை அறிய மற்றும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் பெண்கள் அங்கே சாகும்வரை உண்ணவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்களை ஐநா விசாரணை குழு சென்று சந்தித்திருக்கிறது. அதன்பின்னர் அவர்கள் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். இது சர்வதே அளவில் தமக்கு அழுத்தத்தை தரும் என்பதால் அதனை முறியடிக்கும் வேலையை இலங்கை அரசு செய்ய ஆரம்பித்திருக்கிறது.

அதன்படி உலகவங்கியின் கூட்டத்தில் கலந்துகொள்ள இலங்கையின் நிதியமைச்சர் மங்கள சமரவீரா அமெரிக்கா சென்றிருக்கிறார். அப்போது அமெரிக்காவின் வெளியறவு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தபோவதாக இன்று சிங்கள பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டு இருக்கிறது. இன்னொரு புறம் இலங்கையில் நடந்த இந்த போராட்டத்தை மறைக்கும் வேலையை தி ஹிந்து பத்திரிக்கைக்கு இலங்கை கொடுத்திருக்கிறது. அதனாலேயே தொடர்ந்து இரண்டு வாரங்களாக மிகமோசமான கட்டுரைகளை கொஞ்சமும் ஆதாரமின்றி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இது போன்ற வேலையை தொடர்ந்து செய்யும் தி-ஹிந்து என்ற விசகருமியை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கும் வேலையை நாம் முன்னெடுப்போம்.

இது எல்லாவற்றையும் தாண்டி எத்தனை சதிகளை எங்களுக்கு எதிராக சிங்களம் செய்தாலும் அத்தனை சதிகளையும் முறியடிக்கும் வல்லமை எங்களுக்கு உண்டென்று நிருபிக்கும் வகையில் நேற்று யாழப்பாணமே முடங்கிப்போகும் வகையில் போராட்டத்தை ஈழத்தமிழர்கள் செய்திருக்கிறாரகள். இதில் நிச்சயம் அவர்கள் வெல்வார்கள். அவர்களுக்கு நாம் துணை நிற்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Leave a Reply