தேர்தல் அரசியல் இயக்க அரசியல் – பாகம் 4

- in பரப்புரை

இந்திய ஒன்றியத்தில் இருந்துகொண்டு ஒரு மாநிலத்திற்கு மட்டும் தனிச்சட்டம் கொண்டு வர முடியாது என்பதை கடந்த பாகங்களில் ஆதாரத்தோடு பார்த்தோம். இப்போது மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்து அது மாநிலங்களை பாதிக்கிறது என்பதற்காக மாநிலங்கள் அந்த திட்டத்தை நிறுத்த முடியுமா? என்பதை இப்போது பார்ப்போம்.

உதாரணமாக சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற திட்டத்தை எடுத்துக்கொள்வோம். இந்த சட்டத்தை மத்திய அரசு தான் கொண்டுவந்தது. இந்த திட்டத்தால் எல்லா மாநிலங்களிலுமுள்ள சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்களென்று பெரும்பாலான மாநிலங்கள் தமிழ்நாடு உட்பட எல்லோரும் எதிர்த்தார்கள். ஆனால் அவ்வளவு பேரின் எதிர்ப்பையும் மீறி அந்த சட்டம் அப்போது மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேறியது. 40எம்பிக்களை கொண்ட தமிழ்நாடு கொண்ட தமிழ்நாட்டால் ஏன் இதை தடுத்து நிறுத்த முடியவில்லை. (திமுக வெளிநடப்பு செய்தது)

ஏன்னென்றால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மக்களவையில் (லோக் சபா) மாநிலங்களவையிலும் (ராஜியசபா) பெரும்பான்மையை நிறுவிவிட்டு எந்தவொரு மசோதாவையும் நிறைவேற்றிக் கொள்ளலாமென்று இருக்கிறது. அதன்படி 552 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் 271 உறுப்பினர்களின் ஆதரவிருந்தால் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ளலாம். மாநிலங்களவையில் 250உறுப்பினர்களில் 167பேர் ஆதரவிருந்தால் எதையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இதன்படி பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் அது எந்த மக்களை பற்றியும் கவலைப்படாமல் ஒரு சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளமுடியும். தற்போதைய பிஜேபி மோடி அரசு போல. அது இல்லையென்றால் இந்தியாவில் ஹிந்தி பேசும் மாநிலங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டும் 228ஆக இருக்கிறது. மீதமிருக்கிறவர்களை பயன்படுத்தி எந்தவொரு மசோதாவையும் எளிமையாக நிறைவேற்றிக்கொள்ளமுடியும்.

இதுக்கு வழியில்லையென்றால் இருக்கவே இருக்கிறது ’அவசரச்சட்டம்’ எங்கும் எதையும் பற்றி கவலைப்படாமல் நேராக அவசரசட்டத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி ஓப்புதல் பெற்று 125கோடி மக்களின் பிரதிநிதிகளிடம் ஒரு வார்த்தைகூட கேட்காமல் ஒரு மசோதாவை நடைமுறைப்படுத்த முடியும். மோடி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு 90% மசோதாக்கள் இப்படித்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தான் இருக்கிறது.

இப்படி சட்டமியன்றும் அதிகாரத்தில் மாநில அரசுகளால் ஒன்றும் செய்ய முடியாது. வேறு என்னசெய்யமுடியுமென்று கேட்கீறீர்களா? மத்திய அரசு சட்டம் நிறைவேற்றினால் அதை மாநிலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியது தான் மாநில அரசுகளின் வேலை. இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது 356ஆவது பிரிவு ஆட்சிக் கலைப்பு.

Leave a Reply