தேர்தல் அரசியல், இயக்க அரசியல் ஒரு பார்வை

அதிகாரத்தை மட்டும் கொடுத்து பாருங்கள் தமிழகத்தையே தலைகீழாக புரட்டி போடுகிறேன் என்ற சத்தம் தமிழகமெங்கும் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவரால் தொடர்ந்து முழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது உண்மையா? என்று ஒரு கழுகு பார்வை பார்க்கலாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டு ஒரு கட்சி இங்கு செயல்படமுடியும். அதன்படி பார்த்தால் தேர்ந்தெடுக்கப்படும் நபர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நடக்கவேண்டும் இது தான் விதி.

அதன்படிதமிழகத்தை பாதிக்கும் ஏந்தவொரு திட்டத்தையும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தடுத்து நிறுத்தி விடுவோமென்று சொல்லித்தான் ஓட்டு கேட்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் மாநில நதிகளை இணைப்போம், தண்ணீரை தனியாருக்கு கொடுப்பதை நிறுத்துவோம், கல்வியை தனியாரிடமிருந்து மீட்டு அனைவருக்கும் இலவச கல்வி கொடுப்போம், விவசாயத்தை மீட்டு பொது விநியோக திட்டத்தை திறம்பட நடத்துவோம், அண்டை மாநிலங்களுடனான பிரச்சனையை தீர்ப்போம், கச்சத்தீவை மீட்போம், தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பு கோருவோம், தனியார் கம்பெனிகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை குறைத்து தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுப்போம், நமது நீதிமன்றத்தில் தமிழிலே வாதாட அனுமதி பெற்றுத்தரவோம், தமிழகத்திலே தமிழில் படித்தால் தான் முன்னுரிமை என்று அறிவிப்போம் போன்ற எண்னெற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறோமென்று சொல்லிதான் நம்மிடம் வாக்குகேட்டு வாருகிறாரக்ள். ஆனால் இதையெல்லாம் சொல்லித்தான் கடந்த 60ஆண்டுகளாக நம்மை ஆட்சி செய்தார்கள். அவர்களால் ஏன் இதையெல்லாம் செய்ய முடியவில்லை என்று நாம் ஒருவரும் யோசிப்பதில்லை.

இல்லையென்றால அவர்கள் அயோக்கியர்கள் அதனால் தான் கொண்டுவரவில்லை. நாங்கள் பரிசுத்தமானவர்கள் நாங்கள் பரலோகத்திலிருந்து நேரடியாக களமிறக்கப்பட்டவர்கள். அதனால் எங்களால் முடியுமென்று தனது பிரச்சாரத்தை ஓட்டு கட்சிகள் செய்கிறார்கள். ஆனால் இந்த ஓட்டு கட்சிகள் என்றில்லை அவர்கள் நம்புகிற எந்த கடவுளே ஆனாலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இருந்துகொண்டு ஒரு மாற்றத்தையும் கொண்டுவந்துவிடமுடியாது என்பதுதான் உண்மை, எப்படி?

உதாரணத்திற்கு மேற்ச்சொன்ன அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமென்றால் அது மாநில பட்டியலிலேயே இருந்தாலும் கூட வெறுமன சட்டமன்றத்தை கூட்டி சட்டத்தை நிறைவேற்றிட முடியாது. அந்த சட்டத்தில் ஆளுநரின் கையெழுத்து இருந்தால் தான் அந்த சட்டம் நடைமுறைக்கு வரும். அதன்படி ஆளுநருக்கு கீழ்கண்ட அதிகாரங்கள் இருக்கின்றன.

1.அந்த சட்டத்தை ஏற்று தம்முடைய கையெழுத்து போட்டு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரலாம்.

2.கையெழுத்திடாமல் ’போட முடியாது’ என்று ஆளுநர் அறிவித்து விடலாம். அப்படியென்றால் சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை மாநில அரசால் நடைமுறைப்படுத்த முடியாது. மீறீனால் ஆளுநர் 356பிரிவை பயன்படுத்தி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவார்.

3.மேற்கண்ட முறையில்லாமல் ஆளுநர் நான் இந்த சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கிறேன் என்றும் சொல்லலாம். அதில் குடியரசு தலைவர் கட்டாயம் கையெழுத்து போட வேண்டுமென்று அவசியமில்லை அவர் திரும்பவும் ஆளுநருக்கே அந்த மசோதவை அனுப்பி விடலாம்.

4.இந்த மூன்றுமில்லாமல் இன்னொரு முறையும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 201இல் இருக்கிறது. அதாவது ஆளூநர் தன்னிடம் வரும் சட்ட மசோதாவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலவரம்பின்றி கிடப்பில் போடலாம். அப்படி அவர் ஆளுநர் மாளிகையிலேயே அந்த மசோதாவை வைத்திருந்தால் அவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் அவரிடம் இதுகுறித்து கேள்வி கேட்க முடியாது. இதன் அடிப்படையில் தான் தற்போது நீட் குறித்து தமிழக அரசு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதனை ஆளுநர் ஓப்புதலோடு குடியரசு தலைவருக்கு அனுப்பிவிட்டொமென்று தமிழக் அமைச்சர்கள் சொல்கிறார்கள். ஆனால் குடியரசு தலைவர் அலுவலகமோ எங்களிடம் எப்படி எந்தவொரு சட்டமசோதாவும் வரவில்லையென்று சொல்லிவிட்டார்கள் அப்படியென்றால் அந்த சட்டமசோதா இப்போது யாரிடமிருக்கிறது. யாருக்கும் தெரியாது. நாம் அதுகுறித்து கேட்க வேண்டுமென்றாலும் கேட்க முடியாது. ஏனென்றால் சட்டத்தில் இதற்கு இடமில்லை.

இப்படி ஆளுநரும், குடியரசு தலைவரும் நினைத்தால் மாநில உரிமைகளை குறித்தான சட்ட மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் (வீட்டோ) அதிகாரமிருக்கும் சூழலில் நாங்கள் ஆட்சியை பிடித்தால் அனைத்தையும் மாற்றி விடுவோமென்று சொல்லுவது ஏமாற்றுத்தனம் தானே? இது ஒன்று தான் இதுபோல ஆயிரமாயிரம் சட்டங்கள் இருக்கிறது மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதற்கு.

இதற்கு மாற்று என்ன? இயக்க அரசியல் தான் மாற்று. உதாரணமாக ஜல்லிகட்டு குறித்தான சட்ட மசோதாவை குடியரசு தலைவர் இரண்டு முறை முடியாது என்று திருப்பி அனுப்பினார். ஆனால் பத்து லட்சம் பேர் அரசியல்கட்சிகள் இல்லாமல் தமிழர் கடலாம் மெரினாவில் திரண்டபொழுது தான் முடியாதென்று சொன்ன சட்டதிருத்தம் மத்திய அரசின் ஓப்பதலோடு நிறைவேற்றப்பட்டு ஜல்லிகட்டு நடந்தேறியது.

ஆகவே இயக்க அரசியல் தான் வெற்றியை பெற்றுத்தரும் என்பதை உணருங்கள் தோழர்களே. இயக்க அரசியலுக்கு அணியமாகுங்கள்.
நாம் வெல்வோம்.

 

Leave a Reply