நீட் தேர்வினை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வினை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரி மே பதினேழு இயக்கம் சார்பாக இன்று 15 செப் 2017 மாலை 5 மணியளவில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தோழர் விடுதலை அரசு, வழக்கறிஞர் கமருதீன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க தோழர் இளவழகன், தமிழக மக்கள் முன்னணியின் தோழர் அரங்க குணசேகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், உணர்வாளர்கள் கலந்துகொண்டனர். மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் கண்டன உரையாற்றினார்.

நிகழ்வில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்திய அரசே!
– கல்வியை மாநிலப் பட்டியலில் இணைத்திடு!
– மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிடாதே!
– கல்வியை காசாக்கும் WTO ஒப்பந்தத்திலிருந்து வெளியேறு!

தமிழக அரசே!
– மத்திய அரசின் அடியாளாய் தமிழக மாணவர்களை வஞ்சிக்காதே! 

Leave a Reply