வஞ்சிக்கப்படும் தமிழகம்-பெரியாரின் 139வதுபிறந்தநாள் பொதுக்கூட்டம்.

- in பரப்புரை

நேற்று 16-09-2017 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் கல்வியுரிமை, பொருளாதார, இயற்கை வள சுரண்டலை மீட்கும் நோக்கில் வஞ்சிக்கப்படும் தமிழகம் என்ற தலைப்பில் சென்னை எம் ஜி ஆர் நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புத்தர் கலைக்குழுவின் பறையிசையோடு பொதுக்கூட்டம் தொடங்கியது.
நிகழ்வை மே பதினேழு தோழர் சுசி ஒருங்கிணைத்தார். இக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க தோழர் கொண்டல் சாமி, தமிழர் விடியல் கட்சியின் மாணவர் அணி தோழர் நவீன், தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன், விடுதலை தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் மற்றும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் ஆகியோர் பெரியாரின் தற்கால தேவையை விளக்கி உரையாற்றினார். நிறைவாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் நன்றியுரை ஆற்றினார். இதில் ஏராளமான பொதுமக்கள், உணர்வாளர்கள் இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply