மேத்யூ லீயை ஐநாவிலிருந்து நீக்கியதை கண்டித்து கண்டனக் கூட்டம்.

ஐநாவிற்குள் நடக்கும் ஊழல்களையும், அக்கிரமங்களையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த இன்னர் சிட்டி பிரஸ் என்ற பத்திரிக்கையையும் அதன் ஆசிரியரான மேத்யூ லீயையும் மிகக்கொடுரமாக வெளியேற்றிய ஐநாவை கண்டித்து கடந்த சனிகிழமை 05.03.2016 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் கண்டணக் கூட்டத்தை மே பதினேழு இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூட்டத்தின் நோக்கம் குறித்தான அறிமுக உரையை நிகழ்த்தினார். பின்னர் தோழர்கள்

தோழர். அரங்க குணசேகரன் தமிழக மக்கள் முன்னனி
தோழர். கயல் வழக்கறிஞர்
தோழர். கார்ட்டூனிஸ்ட் பாலா ஊடகவியலாளர்
தோழர். கவிதா சொர்ணவல்லி ஊடகவியலாளர்
தோழர். செந்தில் ஊடகவியலாளர்
தோழர். மகா.தமிழ் பிரபாகரன் ஊடகவியலாளர்
உள்ளிட்டோரும் இணையம் (SKYPE) வழியாக
தோழர். விராஜ் மெண்டிஸ் (பிரமன் மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்தவர்)
தோழர். லதன் ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்க போராடிக் கொண்டிருப்பவர்.

மேலும் பல ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் பல்வேறு இயக்கங்களும்  கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

Leave a Reply