மே பதினேழு – தமிழீழப்படுகொலை நினைவு நாள் – 17-மே -2010

- in பரப்புரை
மே பதினேழு – தமிழீழப்படுகொலை நினைவு நாள் 


17-மே -2010

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இதே பதினேழு மற்றும் பதினெட்டாம் தேதியில், உலத்தின் கண்முன் 40,000 தமிழர்கள் தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். உலகிலேயே முதல் முறையாக ஒரு நாகரீகமடைந்த, முன்னேறிய சமூகத்தின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என இரக்கம் இல்லாமல் அழித்து ஒழிக்கப்பட்டார்கள். இன்று வரை இதற்கான நியாயம் கிடைக்காமல், அனைத்தையும் இழந்த இனமாக தமிழினம் இலங்கை அரசிடம் அனாதையாக சிறைபட்டு இருக்கிறது. ஏழுகோடித் தமிழர்களை கொண்ட தமிழகத்தமிழர்கள் போர்சமயத்தில் மெளனமாய் அழுதது போலல்லாமல் தமிழீழபோராட்டத்திற்கு ஆதரவளிக்க வெளிப்படையாக வரவேண்டும். தமிழீழத்தமிழர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாய் ஆயுத போராட்டத்திலும், அதற்கு முன் முப்பது ஆண்டுகளாய் அகிம்சை வழியிலும் போராடி வென்ற அவர்களின் தாய்நிலம் ‘தமிழீழம்’ இன்று சிங்கள இனப்படுகொலை அரசின் ஆக்கிரமிப்பில் உள்ளது. தமிழீழ நாடு இலங்கை அரசின் பிடியில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு அடித்தளமாய் தமிழக தமிழர்களாகிய நாம் ஒன்றினைந்து படுகொலை செய்யப்பட்ட அந்த மக்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன், நமது புதிய மாநில அரசை “இலங்கை ஒரு இனப்படுகொலை அரசு” மற்றும் “தமிழீழம் தமிழர்களின் சுதந்திர நாடு” என அறிவிக்க வற்புறுத்துவோம். இந்த அறிவிப்பே நமது தமிழின உறவுகள் சுயமரியாதையுடனும், அச்சமின்றியும், படுகொலைகள், பாலியல் வன்புணர்ச்சி அக்கிரமங்கள் அற்ற ஒரு வாழ்வை வாழ உறுதி செய்யும். இந்த அறிவிப்பு நமது மீனவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் அளிப்பதாக அமையும். இதை செய்வது நமது கடமை. இந்த கோரிக்கைக்கு ஆதரவளித்து வலுப்படுத்துங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.மேலும் இந்தப் படுகொலை போரில் இலங்கை அரசுக்கு துணைசெய்த ”ஏர்டெல்” போன்ற நிறுவனங்களையும் தமிழகத்தை விட்டு விரட்டுவோம்.

தமிழீழ மக்களுக்கும்-போராளிகளுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.
தமிழீழம் ஒரு சுதந்திர நாடு என உரக்கச் சொல்லுவோம்.
அனைவரும் கைகோர்ப்போம். நாம் வெல்வோம்.

Leave a Reply