ஐயப்ப பக்தர் சாந்தவேல் கொலை

- in பரப்புரை
சாந்தவேல் (39 வயது) பிளம்பிங்க் வேலை பார்த்த ஒரு கூலி தொழிலாளி, மனைவி மற்றும் இரு மகள்களுடன் (12 வயது, 9வயது) வாழ்ந்து வந்தவர். முதன் முறையாக சபரிமலை கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து முகப்பேரை சேர்ந்த சந்திரா குருசாமியிடம் பணம் செலுத்தி ஜனவரி 6ம் தேதி சபரிமலை சென்றார். ஆனால் இரண்டு நாள் கழித்து அவரது மனைவிக்கு கேரள காவல் துறையினர் கூப்பிட்டு உங்கள் கணவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்ற தகவலை சொல்லியிருக்கிறார்கள். அவரது மனைவியும் சொந்தகாரர்களும் கிளம்பி கோட்டயம் சென்ற பொழுது காவல்துறையினர் சரியான தகவலை தராமல் முறையாக காவல்துறை குற்றத்தை பதிவு செய்யாமல் ஒரு வெள்ளை காகிதத்தில் விபத்து என்று மட்டும் எழுதி கொடுத்து கணவரை கூட்டி செல்லும் படி சொல்லிவிட்டனர்.

அங்கிருந்து இரயில் மூலமாக சென்னை கொண்டு வந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 11ம் தேதி அனுமதித்துள்ளார்கள். அதன்பிறகு சிகிச்சை பலனின்றி சாந்தவேல் மரணம் அடைந்தார். கேரள மருத்துவமனையில் இருந்து சென்னை வரும் வழியில் தனது மனைவியிடம் அவர் சொல்லிய தகவல் “டீக்கடையில் வாக்குவாதம் நடந்தது அப்பொழுது என் மீது சூடுதண்ணியை எடுத்து ஊத்திவிட்டார்கள்” என்பது தான் இதை தவிர வேறு எந்த தகவலும் தெரியவில்லை. கூட்டிசென்ற குருசாமியும் இவரை காணவில்லை என்றோ தேடும் முயற்சியோ செய்யாமல் கூட்டிசென்ற மற்ற 79பேருடன் திரும்பி வந்துவிட்டார். சாந்தவேலை தேடும் எந்த விதமான முயற்சியையும் சந்திரா குருசாமி மேற்கொள்ளவில்லை.

கேராளவில் காவல்துறையினர் சொல்லியது போல் விபத்து என்றால் கூட முறையாக செய்யவேண்டிய முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கோட்டயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட விவரங்கள் கொடுக்கப்படவில்லை. கேரள அரசு இந்த விசயத்தை முழுவதுமாக மூடி மறைக்கும் வேலையை ஏற்கெனவே தேனி கம்பம் பகுதி மக்கள் கூலி வேலை செய்ய சென்ற பொழுது தாக்கப்பட்டதை மறைத்தது போல் மறைக்க முயல்கிறது.

தமிழக காவல் துறையினர் இறந்தவரின் உடலை ஒப்படைக்க உறவினர்களை கேரளாவில் சென்று ஆவணங்களை வாங்கிவர சொல்லியிருக்கின்றனர். இங்கும் எந்த வழக்கும் பதிவு செயயாமல். சாந்தவேலின் சகோதரர்கள் அழைத்து சென்ற குருசாமியின் மீது குற்றசாட்டு பதிவு செய்த பிறகே இவர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

• சாந்தவேலின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கொலையை செய்த கொலைகாரர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

• தொடர்ந்து தமிழர்கள் மீதான அரசபயங்கரவாதத்தை நடத்தும் காங்கிரஸ் கட்சியை தடை செய்ய வேண்டும்.

• தமிழக மக்களை பாதுகாக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.

-மே பதினேழு இயக்கம்

Leave a Reply