காணொளி : தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

தமிழீழம் தான் உறுதியான முடிவு என்பதை மெரினா கடற்கரையும் நிறுவுகின்றது-காசியானந்தன்

நாங்கள் தமிழீழம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம் அது மட்டும்தான் அந்த மக்களுக்கு பாதுகாப்பு இருக்கமுடியும் என்பதை தலைவர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழீழத்தில் கண்டோம் அங்குமட்டும்தான் சிங்கள ஆட்சியாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதை கண்ணூடாக கண்டோம் என்று உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று இடம்பெற்ற தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்

தமிழக மக்கள் மெழுகு வர்த்தி ஏத்தி சிங்கள அரசிற்கு எதிரான எதிர்பையும் தமிழ்மக்களுக்கு சார்பான உணர்வினையும் இன்று மெரினா கடற்கரையில் வெளிப்படுத்தினார்கள்.
தமிழ்நாட்டின் உணர்ச்சியினை மெரினா கடற்கரையில் மக்கள் அள்ளிக்கொட்டினார்கள்.
இந்த கடற்கரையில் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்களை நெருப்பிட்டு எரித்தது சிங்கள அரசு ஒட்டுமொத்தமாக தமிழ்மக்கள் முள்ளிவாய்க்காலில் எரிக்கப்பட்டார்கள் அந்த நெருப்பு ஒருநெருப்பு இன்று மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தியில் எரிக்கின்ற நெருப்பு இன்னொரு நெருப்பு அந்த நெருப்பு தமிழினத்தை அழித்த நெருப்பு இந்தநெருப்பு தமிழினத்தை காக்கின்ற நெருப்பு தமிழ்நாட்டின் உணர்ச்சியை மெழுகுவர்த்தி நெருப்பாக மக்கள் காட்டினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-அனைத்துலக தமிழ் மையம்

Leave a Reply