Hiroshima and Nagasaki Remembrance Day

- in Articles, ENGLISH

வரும் ஆகஸ்டு 6, 2012, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அணு கதிர்வீச்சு காரணமாக கொல்லப்பட்ட ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி பேரழிவை நினைவு கூர்தலுக்கு ஒன்று கூடல்… அணு கதிர்வீச்சு நமது வாழ்க்கையை அழிப்பது என்பதை விட நம் குழந்தைகளுக்கு வாழ்வு என்ற ஒன்றையே இல்லாது செய்து விடுகிறது…புற்று நோய்களும், குறைபாடுடன் கூடிய குழந்தை பிறப்புகளும் கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்டிருப்பதை உலகம் பதிவு செய்திருக்கிறது…. ரசியாவின் செர்னோபிலில் நடந்த அணு உலை விபத்து தமிழ் நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் வரை கதிரியக்கத் துகள்கள் வந்து சேருவதாக சொல்கிறார்கள் அறிவியலார்கள்.. ஜப்பானின் புகுசிமோ விபத்து அமெரிக்காவின் மேற்கு கரையோரம் வரை சென்றதை கவனித்தோம்… அணு கதிர்வீச்சு துகள்கள் விசா வாங்காமலேயே நாடுகளை கடக்கின்றன, விமானம் ஏறாமலேயே கண்டங்கள் கடக்கின்றன… மழை அவற்றை நமது நீர் நில நிலைகளில் பத்திரிமாக தரை இறக்குகிறது… நமது செடி, கொடிகள் அந்த கதிரியக்க கூறுகளை உள்வாங்கி நமது உணவில் கதிரியக்கத்தை சேர்ப்பிக்கின்றன… ஒரு நாளைக்கு ஒரு குடம் தண்ணீர் குடித்து சிறு நீரில் வெளியேற்றினால் ஒரு மாதத்திற்கு ஆயிரத்தில் ஒரு பங்கு அளவு கதிரியக்கம் நம் உடலில் இருந்து வெளியேறும் என்கிறார்கள்…. இது நமக்கு தேவையா?…. அணு கதிர்வீச்சினையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நாம் திரள்வது என்பது இனி வரும் காலத்தில் தமிழகத்தில் கதிர்வீச்சு விபத்து நடக்காமல் இருக்க நாம் எடுக்கும் முதல் அடி ஆகும்… இந்த முதற்படியை நாம் சென்னையில் ஆகஸ்டு 06 ஆம் தேதி மாலை 4 மணி முதல் திரண்டு உங்களது கருத்துக்களையும்,கவலையையும

், அக்கரையையும் பதிவு செய்ய வேண்டுகிறோம்… இந்த செய்தியை உங்களது நண்பர்களிடத்தில் சென்று சேர்ப்பியுங்கள் அதுவே நீங்கள் இந்த கதிரியக்க விபத்தை பற்றிய உங்களது அக்கரையை உங்கள் சமூகத்தில் கொண்டு சேர்க்கும் முதற்படி.. நான் எனது குழந்தையுடன் அங்கு பங்கேற்பேன்… நீங்களும் அவசியம் வாருங்கள்… இது நமது சமூகத்தின் எதிர்காலத்திற்கான ஒரு முதல் நடவெடிக்கை



ஹிரொசிமா நகரில் அணு குண்டு விழுந்தபோது ’சடாகொ சசாகி’ 
(http://en.wikipedia.org/wiki/Sadako_Sasaki ) என்கிற அந்த இரண்டு வயது சிறுமி சன்னலின் வழியே வெளியே வீசப்பட்டாள். அவளது அம்மா அவள் இறந்து விட்டாள் என்றே எண்ணினாள். ஆனால் அவள் அப்போது சாகவ
ில்லை. அணு குண்டு வெடித்து 10 ஆண்டுகள் கழித்து அவளது உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டபோது அவளுக்கு ரத்த புற்று நோய் வந்திருப்பது தெரிந்தது. 12 வயதாகி இருந்த அவளுக்கு சிறு வயதில் அவளது ஊரில் கேள்விப்பட்ட ஒரு நம்பிக்கை நினைவுக்கு வந்தது. காகிதத்தில் சப்பானிய நாரை பறவை வடிவம் போல ஆயிரம் வடிவத்தை செய்தால் எந்த வரம் வேண்டுமானாலும் நடக்கும் என்கிற நம்பிக்கையை நினைத்து அவ்வாறே செய்யத் துவங்கினாள். அவள் மருத்துவமனையில் இருந்த போதெல்லாம் அந்த காகிதப்பறவையை செய்தாள். காகிதம் போதவில்லை. அவளது மருந்து சீட்டு உட்பட பக்கத்து நோயாளிகளிடம் இருந்தெல்லாம் காகிதம் வாங்கி பறவையை செய்தாள். அவள் 644வது பறவையை செய்து முடித்த போது அவளது கால் நிறம் மாறி வீங்கியது. எதேனும் சாப்பிடு என்று அவளது குடும்பத்தினர் சொன்னதற்காக சாதமும்- தேனீரும் அருந்தினாள். அருந்திய பின் “ மிகவும் நல்லாயிருக்கு” என்று சொன்னாள். அதுவே அவள் பேசிய கடைசி வார்த்தை. அணு குண்டு வெடித்து 10 ஆண்டுகள் கழித்து அதன் கதிர்வீச்சினால் புற்று நோய் கண்டு அந்தக் குழந்தை இறந்து போனாள். அவளது அம்மாவிற்கு அக்குழந்தையின் நோயினை ‘அணு குண்டு நோய்’ என்றே அழைத்தாள். அணு கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ‘சப்பானிய நாரை’ காகித பொம்மைகள் செய்து முடிக்க நேரம் போதுவதே இல்லை. ரசியாவின் செர்னோபிலில் இருந்த 9 லட்சத்து ஐம்பதினாயிரம் நபர்களும் ஆயிரம் நாரை பொம்மைகளை செய்யமுடியாமலேயே கதிர்வீச்சு நோயினால் இறந்து போனார்கள். கதிர்வீச்சினால் இறந்து போகும் ஒவ்வொருவருக்கும் ’சடாகொ சசாகி’ சொர்க்கத்தில் தனது கைகளினால் காகித நாரைகளை செய்து தருகிறாள். பல்லாயிரம் வருடங்கள் ஆனாலும் வெடித்த அணு குண்டிலிருந்தும், அணு உலையிலிருந்தும் கதிர்வீச்சு வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அணுவின் ஆற்றலை பாதுகாப்பாக உபயோகிக்க முடியாது என ஜப்பானியர்களும், ஜெர்மானியர்களும் அறிந்து கொண்டு அணு ஆயுதங்களையும், உலைகளையும் மூடினார்கள். அடிபட்டு தெரிந்து கொள்ள நாம் ஆடு மாடுகள் அல்ல. ’சடாகொ சசாகி’ நமக்கு வாழ்வின் அர்த்தத்தை, அணு கதிர்வீச்சின் அர்த்தமின்மையை உணர்த்தினாள். அவளுக்காகவும், எதிர்காலத்தில் வசிக்க இருக்கும் குழந்தைகளுக்காகவும் நான் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்று கூடி நினைவு நிகழ்த்துவோம். குடும்பத்தோடும், குழந்தைகளோடும் கலந்து கொள்வோம். நம் குழந்தைகளே நமது எதிர்காலம்.. வாழ்நாளில் ஒரு மணி நேரத்தை நமது உலகிற்காகவும், இயற்கைக்காகவும்செலவிடுவோம் வாருங்கள்

Leave a Reply