இந்தியாவின் உண்மை முகம் இனப்படுகொலை முகம்

- in பரப்புரை

இந்தியா தன்னை ஒரு காந்தி அரசாக காட்டி கொள்ள முயன்றாலும் உண்மையில் அது ஒரு இனப்படுகொலை அரசே.ஏப்ரல் 4ல் மறைமலை நகரில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கண்டன கூட்டத்தில் மே-17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பேச்சு.

மேலும் அவர் பேசும் போது தமிழக மாணவர்கள் தங்களை தமிழர்கள் என்று அடையாளப்படுத்தி தமீழீழத்திற்க்கான போராட்ட களத்தில் முன்னே நிற்க்கும் காலகட்டத்தில் இந்த கூட்டம் இங்கு நடைபெறுகிறது. களத்தில் இருக்கும் மாணவர்கள் மற்றும் தமிழர்கள் தங்கள் எதிரிகள் யாரேன்று அறிந்து கொள்வது அவசியமாகிறது.இப்பொழுது புதிய தலைமுறை என்ற வார இதழின் ஆசிரியர் மாலன் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தலையங்கம் எழுதுகிறான்.அதுபோல “HINDU”பத்திரிக்கை தொடர்ந்து மாணவர் போராட்டங்களை கொச்சைபடுத்தியதோடு இல்லாமல் இந்திய அரசு மாணவர் போராட்டத்தையெல்லாம் கணக்கில் கொண்டு இலங்கையை பகைக்க வேண்டாம் என்கிறது.இதே கருத்தைதான் சோ முதல் சுப்ரமணிய சுவாமி வரை சொல்கிறார்கள் அல்லது புலம்புகிறார்கள் என்றால் அதற்க்கு காரணம் மாணவர் எழுச்சியே. 2009ல் ஈழத்தில் போர் நடந்த சமயத்தில் அதற்க்கு அனைத்து உதவியும் செய்து தமிழர்களை கொன்ற இந்தியாவிற்க்கு தமிழகம் இதற்க்கு என்ன எதிர்வினை ஆற்றப்போகிறதோ என்ற பயம் இருந்தது ஆனால் தமிழகம் அமைதிகாத்து இந்திய அரசுக்கு உண்டான பயத்தை போக்கியது.ஆனால் சற்றும் எதிர்பாரமல் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இனப்படுகொலைக்கு நீதி கேட்டு பெருந்திரளான மாணவர்கள் இந்திய அரசை நிர்பந்திக்கும் போது அதனை கண்டு இந்த அரசு அஞ்சுகிறது. இந்திய அரசு என்பது பல்வேறு தனிநபர்களும்,பெரிய நிறுவனங்களும் மற்றும் அரசு அதிகாரிகளாலும் ஆனது.அது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய இனப்படுகொலையை செய்கின்ற நாடு.அது பஞ்சாபில் ஒன்றரை லட்சம் சீக்கியர்களை கொலை செய்த அரசு,அது காசிமீரத்திலே ஒரு லட்சத்திற்க்கும் மேற்ப்பட்ட காசுமீரிகளை கொலை செய்த அரசு.அதுபோல இன்னும் எண்ணிவிட முடியாத எண்ணிக்கையில் நாகலாந்திலும்,மிசோரமிலும்,தண்டகாரண்யாவிலும் இனக்கொலையில் ஈடுபடுகிறது. உண்மையில் இந்தியா என்ற வல்லாண்மை அரசு காந்திய அரசாக தன்னை காட்டிக்கொண்டாலும் அது அடிப்படையில் ஒரு இனப்படுகொலை அரசே.இந்த இனப்படுகொலை அரசுதான் தமீழீழத்தில் ஒரு லட்சத்தி நாற்பாதயிரத்து நூற்றி ஏழுபத்தைந்து தமிழர்களை கொன்ற அரசு.மேலும் இன்றுவரை இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் அரசு என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்படுவோம். இந்திய அரசு ஒரு போதும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படாது அதற்க்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதில் ஒன்று இனம் சார்ந்தது தமிழ்தேச பொதுவுடைமை கட்சியின் அய்யா பெ.மணியரசன் சொல்லுவார் நாம் தமிழர்கள் அவன் ஆரியன் ஆகவே இது வரலாற்று பகை அவன் ஒரு காலமும் நமக்கு நன்மை செய்ய மாட்டான் என்பார். அது போலவே மற்றொன்று பொருளாதாரம் சார்ந்தது.இன்று இலங்கையில் பெருமளவு வணிக நிறுவனங்களை நிறுவி அங்கு ஒரு வணிக போட்டியில் இருப்பது இந்தியா தான்.ஆகவே தான் இந்தியா அங்குள்ள தமிழர்களுக்கு எதிராகவே இருக்கிறது என்பதற்க்கு இது இன்னொரு காரணம் ஆகும்.ஆகவே தமிழர்களே இலங்கை அரசை முட்டு கொடுத்துகொண்டு தமிழ்ர்களை அழிக்கின்ற வேலையை செய்த செய்கின்ற இந்த பெரும் நிறுவனங்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.அதன் மூலமே தமீழீழத்திற்க்கான வாசலை நாம் திறக்க முடியும். அத்தகைய போராட்டத்தை தமிழர்கள் அடுத்த கட்ட போராட்டமாக முன்னெடுக்க வேண்டும்.என்றும் பேசினார்.

Leave a Reply