“அமெரிக்க தீர்மானமும் இந்திய அரசு செய்த துரோகமும்”

- in பரப்புரை

அமெரிக்க தீர்மானமும் இந்திய அரசு செய்த துரோகமும் என்று சத்தியம் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.திருமுருகன் பேசியது.

இந்த தீர்மானம் யாருக்கு வெற்றி அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் வெற்றி,குறிப்பாக சிங்களவர்களுக்கு வெற்றி.தமிழருக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தீர்மானத்தில் ஒரு தீர்வும் இல்லை.மற்றும் தமிழர்களுக்கு எதிரான தீர்மானமாகத் தான் இது இருக்கிறது.இலங்கைஅரசின் அதிகாரத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இப்பொழுது அமெரிக்க,இந்தியா மற்றும் இலங்கை சொல்லுகிறதே இதை வலுப்படுத்தவும்,ஒரு 60 ஆண்டு கால விடுதலை போராட்டதை நசுக்க இந்த மூன்று நாடுகளும் முடிவெடுக்கிறதை தான் நாம் சர்வதேச நகர்வுகளில் பார்க்கிறோம்.அதற்க்கு வழிவகை செய்யும் தீர்மானமாகவே இதை தமிழர்கள் நாங்கள் பார்க்கிறோம். ஒரு சர்வதேச விசாரனை வேண்டும் அதற்க்கு ஐ.நாவின் பொது செயலாளரே வழிவகை செய்ய முடியும் என்கிறபொழுது இப்பொழுது கூட சிரியாவில் அங்கு நடந்த கலவரத்தை பற்றி விசாரிக்க ஒரு சர்வதேச விசாரனையை தமாக முன்வந்து பான்கீமூன் அறிவிக்கிறார். அதை விட ஆயிரம் காரணங்கள் தமீழீழத்திற்க்கு உள்ளது ஆனால் அதை இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட விஜய் நம்பியார் என்ற அதிகாரியும்,இந்திய அமைதிகாப்பு படையில் தமிழருக்கு எதிராக போர்க்குற்றம் செய்த பான்கீமூன் மருமகனும் இந்திய அதிகாரியுமான் சித்தார்த் சாட்டர்ஜியும் தனது அதிகாரததை பயன்படுத்தி தடுத்துவிட்டனர்.இதுதான் நிகழ்ந்தது. ஆகவே இப்படிப்பட்ட சமயத்தில் வரும் இந்த அமெரிக்க தீர்மானம் ஒரு அயோக்கிய தீர்மானம் இதைதான் மாணவர்கள் தெளிவாக தொலுரித்து காட்டிவிட்டார்கள்.இது ஒன்று.அடுத்ததாக இந்த காங்கிரஸ் அரசு என்பது ஒரு மனித தன்மையற்ற அரசாங்கம்.அது ஒரு இனப்படுகொலை செய்பவனை ஆதரிக்கிற அதை தனது நட்புநாடு என்கிற ஒரு அயோக்கிய அரசைத்தான் நாம் இப்பொழுது இந்தியாவில் பார்க்கிறோம்.அது இந்திய அரசாக இல்லமால் அது ஒரு பொறுக்கி அரசாக செயல்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு பொறுக்கி அரசு நமக்கான அரசாக இருக்கிறது என்பது அசிங்கப்படக்கூடிய,வெட்கப்படக்கூடிய ஒன்று.இனப்படுகொலை செய்தவனை தனது நட்புநாடு என்று சொல்லுகிறதென்றால் இந்த சமூகம் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை இந்த காங்கிரசாரை பார்த்தால் நாம் புரிந்து கொள்ளலாம். அது மன்மோகன்சிங்காக இருந்தாலும் சரி அது பாஜகவாக இருந்தாலும் சரி இன்று அத்வானி அவர்கள் ஒரு இன அழிப்புக்கு விதையாக இதிகாசத்தை சொல்லி தூண்டுகிறார்.இப்படி காங்கிரஸ்,பாஜக மற்றும் மார்சிஸ்ட் கம்யுனிஸ்ட் போன்ற ஒரு கும்பல் இனப்படுகொலை செய்தவனை ஆதரிக்கிற ஒரு அருவெறுப்பான ஒரு நாட்டை அதன் அதிகாரத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆகவேதான் சொல்கிறோம் இந்திய அரசாங்கம் என்பது ஒரு பொறுக்கி அரசாங்கம் என்று.இந்தியாவிற்க்கும் இலங்கைக்கும்,மன்மோகனுக்கும் அத்வானிக்கும் இராசபட்சேவுக்கும்,சோனியாவிற்க்கும் கோத்தபயவிற்க்கும்,ஒரு வித்தியாசம் இல்லை.பிரகாஸ்காரத்தும், அத்வானியும் இனப்படுகொலையை ஆதரிக்கிறவர்களாகத் தான் இருக்கிறார்கள்.ஒரு கொடுங்கோலனகாத் தான் இருக்கிறார்கள். ஆகவே ஒன்றரை லட்சம் மக்களை கொன்ற ஆதாரங்கள் வெளிவந்த பின்னும் நாங்கள் இனப்படுகொலை செய்தவனைத்தான் ஆதரிப்போம் என்பவர்களை எப்படி மனிதராக ஏற்றுக் கொள்ள முடியும்.இவர்களை தமிழ் நாட்டிலிருந்து விரட்டி அடிப்பதே அடுத்த தேர்தல்களில் தமிழர்களின் குறிக்கோளாக இருக்கும்.இதை தமிழர்கள் செய்ய வேண்டும்.

Leave a Reply