காங்கிரஸ் அரசு 2009இல் செய்த துரோகங்கள் – திருமுருகன் நேர்காணல்

- in பரப்புரை
ப.சிதம்பரத்தின் ஈழம் தொடர்பான கேள்விகளுக்கு, காங்கிரஸ் அரசு 2009இல் செய்த துரோகங்கள்   குறித்த விளக்கம் – நேர்முகம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.

http://www.dailymotion.com/video/x17va63_chidambaram-speech-vs-thirumurugan-gandhi-interview-1dec2013_news


chidambaram speech vs. thirumurugan gandhi… by TamileelamTamilnadu

நிருபர் கேள்வி: இலங்கையில் இறுதிகட்ட போரின்போது போர் நிறுத்தம் கொண்டு வர இந்தியா முயற்சித்தது ஆனால் அதை தமிழகத்தில் உள்ள சிலர் தான் கெடுத்துவிட்டார்கள் என்று சிதம்பரம் அடிக்கடி கூறுகிறாரே.

மே 17 திருமுருகன் பதில்:ஒரு பச்சைபொய்யை இவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்கள்.இதைபற்றி சற்று விரிவாக பார்தோமேயானால் உண்மை வெளிப்படும்.

2009 மார்ச் மாதம் 9ம் தேதியிலிருந்து 12ம் தேதி என்பது போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம்.இந்த கால கட்டத்தில் ஐநாவின் உயர்மட்டகுழு இலங்கைக்கு விஜயம் செய்து எத்தனை மக்கள் இறந்திருக்கிறார்கள் என்ற ஆவணத்தை பார்த்து அதிர்ந்து போய் உடனடியாக ஐ.நாவின் பாதுகாப்பு சபையை கூட்ட வேண்டும் என்று அநத குழுவின் தலைவரான நவநீதம்பிள்ளை மார்ச் 13 2009 கூறுகிறார்.

இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கவிருக்கிற நேரத்தில் முதல் நாள் இரவு ஒரு மின்னஞ்சல் வருகிறது.அதில் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்க்கவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் விதமாக அது வருகிறது.இந்த மின்னஞ்சலை அனுப்பியது இந்தியாவிலிருந்து ஐநாவிற்க்கு அனுப்பப்பட்ட முன்னாள் துணைபாதுகாப்பு செயலாளர் விஜய் நம்பியார்.இவர் தான் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எத்தனை மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று சர்வதேசத்திற்க்கு சொல்லக்கூடாது மற்றும் இலங்கை அரசை குற்றசொல்லாமல் விடுதலைப்புலிகளை குற்றம்சொல்லி அறிக்கை கொடுக்கவேண்டும் என்று கூறுகிறார்.இதன்படி பல செய்திகளை மறைத்து அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கிறது.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏன் முக்கியமென்றால் ஐநாவின் மிக அதிகாரம் கொண்ட மனித உரிமை அமைப்பானது அங்கு மனித குலத்திற்க்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது என்று அறிக்கை கொடுத்தால் உடனே பாதுகாப்பு சபையை கூட்டி போர் நிறுத்தப் பட்டிருக்க வேண்டும்.இதுதான் உலகத்தில் எல்லா இடங்களிலும் நடக்கிறது.குறிப்பாக சிரியா மற்றும் பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே போர்நிறுத்தம் வ்ந்தது.ஆனால் இந்த அறிக்கை அப்பொழுது வரமால் தடுத்தது இந்திய அரசாங்கம்.குறிப்பாக அப்பொழுது பதவியிலிருந்த சிதம்பரம் அவர்களுக்கு இது தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.எனவே இவர்கள் போரை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

சர்வதேசம் இதில் தலையிட நினைத்து தனது ஆட்களை அனுப்புகிறது இதையும் இந்தியாதான் தடுக்கிறது. இதனையடுத்து அங்கு 15ம்தேதி ஐநாவின் இனப்படுகொலை தடுப்பு ஆலோசகர் விஜய் நம்பியார் வருகிறார்.இவர் கொழும்புவிலிருந்த 5நாட்களும் தனது அறையைவிட்டு வெளியே வரவில்லை.ஏன் என்று கேட்டால் வெளியில் climate தட்பவெட்பம் சரியில்லை என்று சொல்லியிருக்கிறார். இந்த சமயத்தில்தான் மே 19அன்று கிட்டத்தட்ட 40,000 தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் இது இந்தியாவின் ஒப்புதலோடு நடந்திருக்கிறது.இப்படி பொறுப்பற்ற அதிகாரியாக ஐநாவிலிருந்த இந்திய அதிகாரி விஜய் நம்பியாரின் அண்ணண் சதிஸ் நம்பியார்தான் இனப்படுகொலை செய்த இலங்கைக்கு இராணுவ பயிற்சி கொடுத்தவர். அண்ணண் இனப்படுகொலை செய்கிறவர் தம்பி அதனை வேடிக்கை பார்த்தவர் இவர்கள் இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள்.இவர்களை இந்த இடத்தில் கொண்டுவந்தது இந்தியாதான்.இது எதுவும் பா.சிதம்பரத்திற்க்கு தெரியாமல் நடந்திருக்காது.

இது ஏதோ மே17இயக்கத்தின் கருத்தோ அல்லது திருமுருகனின் கருத்தோ இல்லை எல்லாமே ஆவணமாக விக்கிலீஸ் மற்றும் ஐநாவின் உள்ளக ஆய்வறிக்கையிலேயே இருக்கிறது.ஆகவே இவர்கள் செய்த அனைத்தும் ஆவணமாகவே இருக்கிறது. இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்க்காகத்தான் அடுத்தவர்களின் மீது பழியை போடுகிறார்கள். மூன்றாவது நாடுகளின் முலம் முயற்சித்தோம் என்பதெல்லாம் சுத்த பொய் மற்ற நாடுகளின் தலையீட்டை தடுத்ததே இந்தியாதான்.இதை நாங்கள் ஆதாரபூர்வமாகவே சிதம்பரம் அவர்களுடன் விவாதிக்க தயாராக இருக்கின்றோம்.ஆனால் அவர் இதற்க்கு தயாரா என்பதுதான் எங்கள் கேள்வி.எனவே இந்த போரை நடத்தி இத்தனை மக்களை கொன்று குவித்ததற்க்கு முழுகாரணமும் இந்தியாதான்.

நிருபர்  கேள்வி:இறுதி போரின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி தீடிரென்று ஏன் ஒரு உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார்?அல்லது எந்த அடிப்படையில் போர் நின்றுவிட்டது என்று உலகக்கு அறிவித்தார்.

மே 17 திருமுருகன் பதில்:கருணாநிதியின் இந்த உண்ணாவிரதத்திற்க்கு பின் மிகப்பெரிய ஒரு நாடகம் நடந்திருக்கிறது.அது என்னவென்றால் ஏப்ரல் 23’ 2009 அன்று போரில் நெருக்கடி அதிகமாகிறது.அதாவது 2009 ஏப்ரல் இராண்டாவது வாரத்தில் தாக்குதல் என்பது மிகக்கொடூரமாக நடக்கிறது பல்லாயிரக்காண மக்கள் கொல்லப்படுகிறார்கள்.இந்த நிலையில் அமெரிக்காவின் தூதர் பெர்லே இந்தியாவின் அதிகாரிகளான சிவசங்கர் மேனன் மற்றும் M.K.நாரயணன் ஆகியோரை கூப்பிட்டு இலங்கையில் உடனே போர் நிறுத்ததை கொண்டு வாருங்கள் என்று கேட்கிறார்.அதற்க்கு இவர்கள் இது சம்பந்தமாக பிரணாப் முகர்ஜி ஹிலாரி கிளிண்டனிடம் பேசுவார் என்று சொல்கிறார்கள். அதற்க்கு முன்பாக நாங்களும் இலங்கை அரசாங்கத்திடம் இது சம்பந்தமாக பேசுகிறோம் என்றும் உறுதி கொடுக்கிறார்கள்.

இதன்படி 2009 ஏப்ரல் 24ம்தேதி சிவசங்கர மேனனும், M.K.நாராயணும் இலங்கைக்கு சென்று அதிபர் இராசபக்சேவுடன் பேசினார்கள்.இதன்படி தற்காலிகமாக போர்நிறுத்தத்திற்க்கு ஒத்துக்கொள்கிறார் இராசபக்சே. இதன்மூலம் போர் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற உதவுகிறோம் என்று சர்வதேசத்திற்க்கு அறிவித்துவிடுகிறார்கள் மேனன்கள்.

இந்த செய்தியை தெரிந்துக்கொண்டே ஏப்ரல் 27ம்தேதி ஒரு உண்ணாவிரத நாடகத்தை நடத்துகிறார் கருணாநிதி.அதாவது எப்படியும் போர் நிறுத்தம் வந்து விடும் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்து ப.சிதம்பரமும் கருணாநிதியும் போட்ட நாடகம் தான் இந்த உண்ணாவிரதம்.

ஆனால் என்ன நடந்தது எந்தவித போர்நிறுத்தமும் நடைபெறவில்லை.ஆனால் கருணாநிதி போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று சொல்லி நாடகத்தை முடித்துக் கொண்டார்.ஆனால் இவரின் பேச்சை நம்பி பதுங்கு குழியில் இருந்து வெளியில் வந்த அப்பாவி மக்கள் இலங்கை இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர்.
ஆனால் இதை பற்றி இன்றுவரை இந்தியாவும், அமெரிக்காவும் ஏன் கருணாநிதியும் வாய்திறந்து பேசாமல் அமைதி காத்து இலங்கையை காப்பாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இதுதான் கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தின் பின்னாலும் முன்னாலும் நடந்த நிகழ்ச்சி நிரல். இந்த துரோகத்தை மறைப்பதற்க்குதான் போர் நிறுத்தத்திற்க்கு வழியிருந்தது அதை இவர்கள் கெடுத்துவிட்டார்கள் அவர்கள் கெடுத்து விட்டார்கள் என்று பொய்யை சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

Leave a Reply