ஜெர்மனியில் நடைபெற்ற சுடர் வணக்க நிகழ்வு – மே 17 இயக்கம்

- in பரப்புரை
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் கடந்த 17.12.2013 அன்று நீங்காத நினைவோடு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மற்றும் தாய்த்தமிழகத்தில் 12.05.1995 அன்று ஈழ நெருப்பை மூட்டிய முதல் வீரன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவாகவும் சுடர்வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.இவ் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திரு உமர் மற்றும் திரு.திருமுருகன் அவர்கள் யேர்மனியில் நடைபெற்ற மக்கள் தீர்பாயத்தின் முக்கியத்தை விளகியதுடன் இத் தீர்ப்பு தமிழர் விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று பதிவாக அமைந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டனர். திரு.திருமுருகன் அவர்கள் தொடர்ந்து பேசுகையில் தமிழர்கள் ஆகிய நாம் எமது பலத்தை வலுவடைய செய்வதால் மட்டுமே எமக்கான உண்மையான நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்தார் . அத்தோடு புலம்பெயர் மக்கள் தொடர்ந்து தூரநோக்கு சிந்தனையுடன் திட்டமிட்ட வகையில் முழு வீச்சோடு தமது பலத்தில் மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்த வேண்டும் என்றும் தாமும் முழு மூச்சோடு ஈழத்தமிழர்களுக்காய் உழைப்போம் எனவும் உறுதியளித்தார் .

நன்றி:ஈழம் நோக்கி

 

Leave a Reply