தமிழ் அகதிகளை விடுதலை செய்ய கோரி சென்னையில் – ஆஸ்திரேலியா தூதரகம் முன்பாக கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்பெற்றது !!

- in பரப்புரை
தமிழ் அகதிகளை விடுதலை செய்ய கோரி சென்னையில் – ஆஸ்திரேலியா தூதரகம் முன்பாக கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்பெற்றது !!

மே 17 இயக்கம், தமிழ் தேசிய இயக்கங்கள், கட்சி மற்றும் மாணவர் இயக்கங்கள் இணைந்து காலவரையறையின்றித் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 42 ஈழத் தமிழர்களை விடிவிக்க கோரி ஆஸ்திரேலிய தூதரிடம் தனது கண்டனத்தை தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியா நாட்டின் இந்த நடவடிக்கையானது அந்த நாட்டின் அகில உலக மனித உரிமை சட்டத்தின்(ICCPR) Article  9 இன் படி தனது சட்டத்தை மீறிய செயலாகும் என்று சுட்டி காற்றப்பெற்றது. ஆஸ்திரேலியா அரசின் இந்த தமிழ் அகதிகள் விரோத நடவடிக்கையை பல மனித உரிமை அமைப்புகள் வன்மையாக கண்டித்திருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக  ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறை(ASIO) ஆயிரக்காணக்கான ஈழ தமிழர்களை முறையான விசாரணையின்றி திருப்பி அனுப்பியுள்ளது. இனியும் அது போன்ற மனித உரிமை மீறல்களையும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தொடராமல் கனடா, லண்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் போல ஈழ தமிழர்களுக்கு நல் வாழ்வை அமைத்துத்தர ஆஸ்திரேலியா செயல் பட வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த போராட்டம் ஆஸ்திரேலியா, லண்டன் மற்றும் ஜேர்மன் நகரங்களிலும் இன்று நடைபெற்றது. பல இளைஞர்கள் இணைந்து தங்கள் நாடுகளில் ஆஸ்திரேலியா அரசை கண்டித்து கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினார்கள்.

ஆஸ்திரேலியா அரசின் இந்த மனிதகுல விரோத போக்கை கண்டித்தும், இனப்படுகொலை இலங்கையிலிருந்து தப்பி வரும் தமிழர்களை மீண்டும் திருப்பி அனுப்ப கூடாது என்று கோரியும் சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணை தூதரிடம் இன்று (20.01.2014) மே பதினேழு இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி, பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் மற்றும் தமிழ் இளைஞர்கள் & மாணவர்கள் கூட்டமைப்பு இனைந்து சென்று மனு அளிக்கப்பட்டது.

Leave a Reply