மீத்தேன் எதிர்ப்பு பேரணி – மன்னார்குடி

- in பரப்புரை
தமிழ் மண்ணைக் காக்க பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் நடத்தும்  இப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் இணைந்து கொள்கிறது.
பேரணியில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்.

தமிழர்களாய் ஒன்றிணைவோம்.
மீத்தேன் எடுக்கும் கார்ப்பரேட்டுக்களை விரட்டியடிப்போம்.

நாள் : 25-1-2014
மாலை 3 மணிக்கு
இடம்: கீழப்பாலம், மன்னார்குடி

25-1-2014 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார்குடியில் நடைபெற்ற மீத்தேன் எதிர்ப்பு பேரணியில் விவசாயிகள்,பெண்கள்,குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து தமிழ் அமைப்புகளும் கலந்து கொண்டனர். மீத்தேன் திட்டடத்தை கைவிடக்கோரியும், ஒப்பந்தத்தை உடனே திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். அரசு மருத்துவமனை அருகே தொடங்கிய பேரணி ,3கிமீ தூரத்துக்கு ஊர்வலமாக சென்று பொதுகூட்ட இடம் வரை நடைபெற்றது. மே பதினேழு இயக்க தோழர்களும் இப்பேரணியில் கலந்து கொண்டனர். மீத்தேன் எதிர்ப்பு பதாகைகளையும், நம்மாழ்வார் பாதாகைகளையும் ஏந்திக்கொண்டு தமிழ் மண்ணை பாழாக்க கார்பரேட்டுக்கு விற்கும் மத்திய அரசின் தொடர் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து அனைவரும் பேரணியில் பங்கேற்றனர். போராளி நம்மாழ்வாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இப்போராட்டம் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

Leave a Reply