- in பரப்புரை
உசிலம்பட்டி விமலாதேவி கவுரக்கொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் 

மதுரையில் இன்று (11/11/2014) திராவிடர் விடுதலை கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு “உசிலம்பட்டி விமலாதேவி கவுரவக் கொலையை கண்டித்து ” தோழர். கொளத்தூர் மணி தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் , மே 17 இயக்கம் – மதுரை ஒருங்கிணைப்பாளர் தோழர். கார்த்திக்., மே 17 இயக்க தோழர்களுடன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். தோழமை இயக்கங்கள் உட்பட சுமார் 200 பேர் பங்கேற்றனர்.

உரைச் சுருக்கம்:

சாதி வெறியில் இவர்கள் செய்யும் இந்தக் கொலையை கவுரவக் கொலை என அழைப்பதை நிறுத்தி “பைத்தியகாரக் கொலை” என நாம் அழைக்க வேண்டும்.
ஆயிரமாயிரம் வருடங்களாக பார்பனீயத்தின் அடிமையாய் இருக்கும் இந்த சாதி வெறியர்கள், தங்கள் சாதி பார்பனீயத்தால் இழிவு செய்யப்படுவதை பார்த்து “கௌவுரவ தற்கொலை ” செய்து கொள்வார்களா?

பார்பனீயம் தமிழகத்தில் பி.ஜே.பி. RSS மூலமாக நுழைந்து தமிழர்களை சாதி வெறியர்களாக மாற்றப் பார்க்கிறது. இதை முறியடிக்க பெரியார் எனும் ஆயுதத்தை நாம் கையில் ஏந்த வேண்டும். நேர்மையான திராவிட இயக்கங்கள் ஒன்று சேர்ந்து கொள்கை ரீதியாக களத்தில் கைகோர்த்து பார்பனீய சக்திகளை எதிர்க்க வேண்டும் எனும் கோரிக்கையை இதே இடத்தில் தந்தை பெரியார் திராவிட கழக தோழர். கோவை ராமகிருட்டிணன் அவர்களிடம் வைத்தேன்.அதே கோரிக்கையை தோழர். கொளத்தூர் மணி அவர்களிடமும் மே 17 இயக்கம் சார்பாக வைக்கிறேன்.

சாதி வெறி, பார்பனீய எதிர்ப்பு போராட்டங்களில் மே 17 இயக்கம் தொடர்ந்து இணைந்து செயல்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.


Leave a Reply