- in பரப்புரை
இனப்படுகொலை இலங்கைக்கு உதவும் இந்தியா:
இனப்படுகொலை இலங்கையில் உள்ள சுமார் 1000 சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சியளிக்க உறுதி அளித்திருக்கிறது.

இந்தியாவையின் இராணுவ பயிற்சி அளிக்கும் உயராதிகாரிகள் 20 பேர் கொண்ட குழு ஒன்று இரண்டு நாட்களுக்கு முன் நவம்பர் 11 அன்று இனப்படுகொலை இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறது.

இவர்கள் 1000 சிங்கள இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவது குறித்து ஆராய இந்திய இராணுவம் உறுதி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.defencenews.in/defence-news-internal.aspx?get=new&id=cgnphkruM9A%3D

ஏற்கனவே இலங்கையின் 80%இராணுவத்திற்க்கு இந்தியாதான் பயிற்சி வழங்கியிருக்கிறது.//”It is the Indian Army that provides more than 80 percent of overseas training opportunities to the Sri Lankan Armed Forces, for which we are grateful,”//இதன் மூலமே இலங்கை அரசு 2009ல்ஒன்றரை லட்சத்திற்க்கும் அதிகமான தமிழர்களை இனப்படுகொலை செய்தது.அது மட்டுமில்லாமல் தமிழக மீனவர்கள் 600க்கும் அதிகமான பேரை இதுவரை கொலை செய்திருக்கிறது.

இலங்கை இராணுவத்திற்க்கு இந்திய அரசு இராணுவ பயிற்சி அளிக்கக்கூடாது என்று தமிழகத்திலுள்ள அனைத்து தரப்பினரும் பலமுறை கேட்டுக்கொண்டாலும் இந்திய அரசு பயிற்சி அளிப்பதை நிறுத்த மறுக்கிறது.

இந்திய அரசு இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கிறது அவர்கள் அதனை தமிழக மீனவர்கள் மீது தினம் தினம் சுட்டு பழகுகிறார்கள்.சாவது தமிழன் தானே என்று இந்திய அரசும் கவலைப்பட மறுக்கிறது.

600மீனவர்களை கொலை செய்த இலங்கை அரசின் மீது இதுவரை ஒரு வழக்கும் இந்திய அரசு பதிவு செய்யவில்லை.

இனப்படுகொலை இலங்கைக்கு தொடர்ந்து உதவும் இந்திய அரசும் இனப்படுகொலையின் கூட்டு குற்றவாளியே..

கொண்டல் மே 17 இயக்கம்

Leave a Reply