- in பரப்புரை

எட்டு தமிழ் மீனவர்கள் மீதான தூக்கை ரத்து செய்து விடுதலை செய்”, “இந்திய அரசே 600 மீனவர்களை படுகொலை செய்த சிங்கள கடற்படையினரை கைது செய்யாதது ஏன்?”, “தமிழர் கடலை பாரம்பரிய மீன்பிடி பகுதியாக அறிவி, மீன்பிடி உரிமையை உறுதி செய்”, “இந்தியா வரும் சிங்கள கடற்படை தளபதிகளை கைது செய்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நவம்பர் 16 ஞாயிறு காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மே பதினேழு இயக்கம் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம்,தமிழ் தேசியப் பேரியக்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழக மீனவர் முன்னணி, தமிழர் விடுதலைக் கழகம், இன அழிப்பிற்கு எதிரான இசுலாமியர் இளைஞர் இயக்கம், தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு, பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் , கூடங்குளம் அணு உலைப் போராட்டக் குழுவின் தோழர் முகிலன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், மாணவர்கள், மீனவர் அமைப்புக்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





Leave a Reply