காவல்துறையினரின் வன்முறைக்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்

- in பரப்புரை
தமிழகத்தில் தொடரும் காவல்துறையினரின் வன்முறை அராஜகப்போக்கை மே17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடித்துத் தள்ளிவிட்டு, இடம் மாற்றம் செய்ய முனைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மாணவர்களின் மீது தடியடி நடத்தி அராஜகப் போக்கினை தமிழகக் காவல்துறை வெளிப்படுத்தியிருக்கிறது. மாணவர்கள் மீது தாக்குதலை ஏவியிருக்கும் இந்த அரச வன்முறையினை மே17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கடலூர் திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையினை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய மக்களை விரட்டி அடித்து கடும் வன்முறைப் போக்கினை தமிழக காவல்துறை கையாண்டிருக்கிறது. மணல் கொள்ளையை தடுக்காமல் போராடிய மக்களின் தாக்குதலை ஏவிய காவல்துறையின் போக்கு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.
தொடர்ச்சியாக போராடுகிற இயக்கங்களின் தோழர்கள் மீதும், போராடுகிற மக்களின் மீதும் தாக்குதல் என்பது தொடர்கதையாகி வருகிறது. உரிமைக்காக போராட்டம் நடத்தும் மக்கள் மீதும், மாணவர்கள் மீதும் தாக்குதலை ஏவிவிடுகின்ற தமிழக காவல்துறையின் அராஜகப் போக்கினை அனைவரும் கண்டிப்போம். போராடுகிற மக்களுக்கும், மாணவர்களுக்கும் துணை நிற்போம்

Leave a Reply