ஈழத்தமிழர்கள் லண்டனில் அமெரிக்க தூதரகத்தின் முன்பு போராட்டம்

- in பரப்புரை
நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் நேற்று லண்டனில் , அமெரிக்க தூதரகத்தின் முன்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை மீதான நடவெடிக்கையை பரிந்துறை செய்யவேண்டுமென்றும், ஐ.நா மனித உரிமைக்கமிசனின் அறிக்கை வெளியிடுவதை தள்ளிப்போடுவதை எதிர்த்தும் போராட்டம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இப்போராட்டத்தில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் படங்களும் எரிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவும், மேற்குலகமும் தமிழர் விடுதலை கோரிக்கையினையும், பிரச்சனைகளையும் வைத்து நடத்தும் அரசியல் பேரத்தினை அம்பலப்படுத்தும் போராட்டங்கள் வெல்லட்டும்.
வழக்கம் போல இந்தியாவின் ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டிருக்காது. யாழ்பாணத்தில் நிகழ்ந்த மாணவர் எழுச்சியையும் திட்டமிட்டு மறைத்திருக்கிறார்கள். தமிழக ஊடகங்களே இதற்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. நீண்ட காலத்திற்கு பின்னர் தன்னெழுச்சியாக மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றதை உலகம் எதிர்பார்க்கவில்லை. இதை ஊடகத்தில் வெளியிட்டால் தமிழகத்திலும் எழுச்சி ஏற்படலாம் என்றே இருட்டடிப்பு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது..
ஆறு வருடத்திற்குள் ஒரு இனம் தனக்கு நிகழ்ந்த ‘இனப்படுகொலையை’ மறந்துவிடும் என்று நினைக்கிறார்கள் போல…
தமிழகமே எழு.. இந்தியாவின் முகத்திரையையும், சர்வதேச சதியையும் எதிர்த்து போராடு….
மார்ச் மாதத்தில் யாழ்பாணத்திற்கு ட்ரவுசர் பாய்ஸ் தலைவர் செல்வதாக சொல்லி இருக்கிறார்கள்.. இந்த மாணவர் எழுச்சி அவர்கள் வயிற்றில் புளி கரைத்திருக்கும். இந்திய தூதரகம் யாழில் தனது திரிபு வேலையை துவக்கி இருக்கும்..
ஈழத்தை எதிர்க்கும் எதையும் எதிர்த்து போராடுவோம் தோழர்களே…

Leave a Reply